கறி குழம்பு

cashew

 

தேவையான பொருட்கள் :

 

கறி                     – ½ கிலோ

நாட்டுத் தக்காளி       – 2 கரண்டி

சின்ன வெங்காயம்     – 200 கிராம்

இஞ்சி, பூண்டு விழுது  – 2 தேக்கரண்டி

மிளகாய்த்தூள்         – 4 தேக்கரண்டி

மல்லித்தூள்            – 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள்           – ¼ தேக்கரண்டி

சோம்பு, பட்டை         – தேவையான அளவு

எண்ணெய்              – தேவையான அளவு

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. கறித்துண்டுகளை நன்றாக அலசி வைக்கவும். குக்கரை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை கருவேப்பிலையை தாளித்து விட்டு, அடுத்து வெங்காயதை போட்டு வதக்கி, பொன்னிறமாக வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும்.

 

  1. பிறகு தக்காளி, அலசி வைத்துள்ள கறித்துண்டு, மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த் தூள் ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் சுண்டும் வரை வதக்கி விடவும், பச்சை வாசனை போனதும் குழம்புக்கு தேவையான தண்ணீரை ஊற்றி சுவைக்கேற்ப உப்பு போட்டு நன்றாக வேக விடவும்.

 

  1. கறி நன்றாக வெந்ததும், கொத்தமல்லி இலையை தூவி மூடி இறக்கி வைக்கவும். முந்திரி பருப்புடன், தேவையான அளவு தேங்காய் சேர்த்து அரைத்து குழம்பில் கலக்கி ஒரு கொதி விட்டு இறக்கும் பொழுது சுவையும் மணமும் கூடுதலாக இருக்கும். சுவையான கறிக்குழம்பு தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.