காய்ந்தகறிக் குழம்பு

காய்ந்தகறிக் குழம்பு

 

 

 

தேவையான பொருட்கள்:

 

உப்புக்கண்டம்          – 100 கிராம்

கத்தரிக்காய்            – 100 கிராம்

சின்ன வெங்காயம்     – 50 கிராம்

இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் கரண்டி

எண்ணெய்              – 2 டேபிள் கரண்டி

மஞ்சள் பொடி          – 1 தேக்கரண்டி

பட்டை                         – தாளிக்க

பிரியாணி இலை       – தாளிக்க

தக்காளி                – 2

 

அரைக்க தேவையானவை:

 

வரமிளகாய்            – 6

தேங்காய்த் துருவல்    – 3 டேபிள் கரண்டி

மல்லி விதை           – 2 டேபிள் கரண்டி

சோம்பு                         – 1 தேக்கரண்டி

சீரகம்                  – 1 தேக்கரண்டி

 

செய்முறை விளக்கம் :

 

  1. காய்ந்தக்கறியை (உப்புக்கண்டம்) கழுவிக்கொண்டு தண்ணீரில் வேக வைக்கவும். அரைக்க தேவையான சீரகம், மல்லி விதை, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், சோம்பு ஆகியவற்றை விழுதாக மிக்ஸ்சியில் அரைக்கவும். கத்தரிக்காய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கவும். இஞ்சி, பூண்டை தனியாக அரைக்கவும்.

 

  1. ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க உள்ள பொருட்களை போட்டு தாளித்து, வாசனை வந்ததும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இவை நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் அளவிற்கு வதக்கவும்.

 

  1. மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு, வெட்டிய கத்தரிக்காய், தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு வேக வைத்து, கறியை தண்ணீருடன் ஊற்றவும். மீண்டும் கலக்கி விட்டு கொதிக்க விடவும், பிறகு அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக வேக வைத்து எண்ணை மேலே மிதந்ததும் இறக்கி பரிமாறலாம்.

Leave a Reply

Your email address will not be published.