கோழி மசாலா

மட்டன் சாப்ஸ் குழம்பு

 

 

தேவையான பொருட்கள்:

 

கோழி                  – ¼ கிலோ

தயிர்                   – ½ கப்

பெரிய வெங்காயம்     – 1 (பொடித்தது)

இஞ்சி                  – 1 துண்டு

மிளகு                  – 10

பூண்டு                  – 5

கிராம்பு                 – 5

ஏலக்காய்               – 5

பட்டை                         – 1

மஞ்சள்த் தூள்          – ¼ தேக்கரண்டி

சீரகம்                  – 1 தேக்கரண்டி

மிளகாத் தூள்          – 1 தேக்கரண்டி

இறைச்சித் தூள்        – 2 தேக்கரண்டி

உப்பு                   – தேவையான அளவு

எண்ணெய்              – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் கோழித்துண்டுகளை கழுவி சுத்தம் செய்யவும். இவற்றுடன் மஞ்சள் தூள் மற்றும் தயிர் சேர்த்து 45 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். கிராம்பு, ஏலக்காய், பட்டை, மிளகு, சீரகம் எல்லாவற்றையும் வாணலியில் வறுத்து இடித்து வைக்கவும். அல்லது மிக்ஸியில் பொடித்து வைக்கவும். இஞ்சி பூண்டு விழுதை தனியாக அரைக்கவும்.

 

  1. ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி, அதனுடன் மசாலா கலவைச் சேர்க்கவும். பின்னர் மிளகாய்த்தூள், இடித்து வைத்துள்ள இறைச்சித் தூளை கலந்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.

 

  1. இதனுடன் ஊற வைத்த கோழித்துண்டுகளையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு கலந்து வேக வைத்து இறக்கவும். சுவையான கோழி மாசாலா தயார்.

Leave a Reply

Your email address will not be published.