கோழிக்கறி குழம்பு

mutton salna

 

 

தேவையான பொருட்கள்:

 

கோழிக்கறி             – 1 கிலோ

மிளகு                  – 15

முந்திரிப்பருப்பு                 – 15

மிளகாய் வற்றல்       – 20

தேங்காய்               – 1

சின்ன வெங்காயம்     – 15 (நறுக்கியது)

பூண்டு                  – 6 பல் (நறுக்கியது)

இஞ்சி                  – 1 துண்டு (நறுக்கியது)

மஞ்சள் பொடி          – ¼ தேக்கரண்டி

மல்லி                  – 3 தேக்கரண்டி

கசகசா                         – 2 தேக்கரண்டி

சீரகம்                  – 2 தேக்கரண்டி

எண்ணெய்              – 10 தேக்கரண்டி

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. கோழிக்கறியைத் வெட்டி நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். ஒரு தேங்காயை துருவி அரைத்து பால் எடுத்து வைக்கவும். வறுத்த மல்லி, சீரகம், மிளகாய் வற்றல், மிளகு, முந்திரிப்பருப்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும்.

 

  1. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைப் போட்டு வதக்கிக் கொள்ளவும். பிறகு  வெட்டி வைத்துள்ள கறித்துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கவும். சிக்கன் நன்றாக வதங்கியதும், எடுத்துவைத்துள்ள தேங்காய் பாலை அதில் ஊற்றி வேகவிடவும்.

 

  1. இதனுடன் மஞ்சள் பொடியும், தேவையான அளவு உப்பும் சேர்த்து கறியில் போட்டு கிளறிவிடவும். சிக்கன் நன்றாக வெந்ததும், குழம்பு கெட்டியாகி எண்ணெய் பிரிந்ததும் இறக்கிவிடவும். சுவையான கோழிக்கறி குழம்பு தயார் .

 

 

 

Leave a Reply

Your email address will not be published.