இரத்த அழுத்தமா? கூலா தண்ணீர் குடிங்க!

blood pressure_9india

அதிகமாக குடிநீர் குடிப்பதால் பல்வேறு பயன்கள் இருப்பது எல்லோருக்கும் தெரியும்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இரத்த அழத்தத்தை சமமாக வைக்க, நரம்பு உறுதி, சக்தி அதிகரிப்பதற்கு தண்ணீர் உதவுவதாக தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள வண்டர்பில்ட் பல்கலைக்கழக மருத்துவ மையம், அதன் ஆராய்ச்சியாளர்கள் குழு, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் மருத்துவ நன்மைகள் பற்றி ஆராய்ந்தனர்.

தண்ணீர் குடித்ததும் அது இரத்த தமணிகளில் அடைப்புகளை கரைத்து ஓடச் செய்வது ஆய்வில் தெரியவந்துள்ளது.  அதன் மூலம், உடலின் இரத்த அழுத்தம் சீராக பராமரிக்கப்படுகிறது.

இரத்த அழுத்த நோயாளிகள் மயக்கம், தலை சுற்றல், வாந்தி உணர்வு போன்ற அறிகுறிகளை உணர்ந்தால், ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் குடிப்பது நல்லது.  அத்துடன் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டையும் தண்ணீர் உறுதிப்படுத்துகிறது.  தினந்தோறும் வேலை செய்கின்ற பொழுது ஏற்படும் சக்தி இழப்பை குறைக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது பற்றி வண்டர்பில்ட் பல்கலைக் கழக மருத்துவ மைய பேராசிரியர்கள் கூறுகையில் ” இரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை தண்ணீர் ஏற்படுத்துவதும், நரம்பு மண்டலத்தை உறுதியாக்குவதும் தெரிய வந்துள்ளது.  இந்த பிரிவில் கடந்த பத்து ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது.” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published.