கோழிக்குழம்பு

சேலம் மட்டன் குழம்பு

 

 

தேவையான பொருட்கள்:

 

கோழி                  – ½ கிலோ

சின்ன வெங்காயம்     – 1 கப்

நறுக்கிய தக்காளி      – 1 கப்

இஞ்சி, பூண்டு விழுது – 2 கரண்டி

மல்லித் தூள்           – 3 கரண்டி

மிளகாய் தூள்          – 1 கரண்டி

மஞ்சள் தூள்           – ½ கரண்டி

உப்பு                   – தேவையான அளவு

 

தாளிக்க தேவையான பொருட்கள்:

 

வெந்தயம்              – ¼ கரண்டி

சோம்பு                         – ¼ கரண்டி

கறிவேப்பிலை          – தேவையான அளவு

எண்ணெய்              – தேவையான அளவு

கிராம்பு                         – தேவையான அளவு

பிரியாணி இலை       – தேவையான அளவு

பட்டை                         – தேவையான அளவு

 

 

அரைக்க தேவையான பொருட்கள்:

 

சோம்பு                 – ¼ கரண்டி

சீரகம்          – ¼ கரண்டி

மிளகு          – ¼ கரண்டி

பச்சை அரிசி   – ¼ கரண்டி

பூண்டு          – 1 பல்

கிராம்பு                 – 2

 

செய்முறை விளக்கம் :

 

  1. கோழிக்கறியை கழுவி சுத்தம் செய்யவும். அரைக்க தேவையான கிராம்பு, பூண்டு, பச்சை அரிசி, மிளகு, சீரகம், சோம்பு, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றாமல் பொன்னிறமாக வறுக்கவும். சூடு ஆறியதும் பொடியாக மிக்ஸியில் அரைக்கவும்.

 

  1. பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, வெந்தயம், சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்து சிவந்த நிறமாக வதக்கவும்.

 

  1. வெங்காயம் வதங்கியவுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள் எல்லாவற்றையும் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்து மல்லித் தூள், மிளகாய் தூள் இரண்டையும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசையவும். அந்த மசாலாவை வெட்டிய கோழி துண்டுகளுடன் நன்கு பிசைந்து கொள்ளவும்.

 

  1. வதங்கிய மசாலாவின் பச்சை வாடை போனதும் சிக்கனை நன்கு வதக்கவும். பிறகு 2 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறிவிட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். சிக்கன் நன்கு வெந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் பொடியை இதனுடன் போட்டு கலக்கி விடவும். நன்றாக குழம்பு கொதித்ததும் இறக்கி பரிமாறவும்.

 

Leave a Reply

Your email address will not be published.