சிக்கன் சாப்ஸ் குழம்பு

சிக்கன் சாப்ஸ் குழம்பு

 

 

தேவையான பொருட்கள்  :

 

கோழி               – ½ கிலோ

எண்ணெய்    – 50 கிராம்

உப்பு         – தேவையான அளவு

 

அரைக்க தேவையான பொருட்கள்  :

 

வெங்காயம்   – 20

பட்டை       – 1

கிராம்பு       – 1

ஏலக்காய்     – 1

தக்காளி      – 2

மிளகாய்      – 15

பூண்டு        – 8 பல்

தேங்காய்     – 3 துண்டு

இஞ்சி        – சிறிதளவு

சோம்பு       – 1 தேக்கரண்டி

கசகசா       – 1 தேக்கரண்டி

சீரகம்        – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

மிளகு               – 2 தேக்கரண்டி

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் கோழிக் கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு அரைக்க தேவையான வெங்காயம், பட்டை, கிராம்பு, ஏலக்காய், தக்காளி, மிளகாய், பூண்டு, தேங்காய், இஞ்சி, சோம்பு , கசகசா, மிளகு, சீரகம், மஞ்சள் தூள் ஆகியவற்றை மிக்ஸியில் அரைக்கவும்.

 

  1. பின்னர் அரைத்த விழுதுதை கோழிக்கறியில் பிரட்டி அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மசாலாவுடன் பிரட்டி வைத்துள்ள கோழிக்கறியை போட்டு நன்றாக வதக்கவும். சிக்கனை தீய விடாமல் கிளறவும்

 

  1. இந்நிலையில் சிக்கனில் எண்ணெய் மேலே பிரிந்து வரும், அப்போது இரண்டு டம்ளர் தண்ணீரை ஊற்றி சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலக்கி விட்டு கடாயை மூடிவிடவும்.

 

  1. கறியை நன்றாக வேக விடவும். சிக்கன் வெந்து குழம்பு கெட்டியானதும் இறக்கி பரிமாற சுவையான சிக்கன் சாப்ஸ் குழம்பு தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.