சிக்கன் பன்னீர் கிரேவி

சிக்கன் பன்னீர் கிரேவி

 

 

தேவையான பொருட்கள்  :

 

எலும்பில்லாத சிக்கன்       – ¼ கிலோ

குடைமிளகாய்              – 1

பன்னீர்                     – 100கிராம்

தக்காளிசாஸ்                      – 1 கரண்டி

சோயாசாஸ்                – 1 கரண்டி

தனியாத்தூள்               – 1 கரண்டி

சீரகத்தூள்                  – 1 கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது       – 1 கரண்டி

மிளகாய்த்தூள்              – 1 கரண்டி

எண்ணெய்                  – தேவையான அளவு

உப்பு                       – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். சிக்கனை துண்டுத் துண்டாக நறுக்கி வைக்கவும். ஒரு வாணலியில் பன்னீரை சிறு துண்டுகளாக நறுக்கிய போட்டு எண்ணெயில் கருக்காமல் பொறித்தெடுக்கவும்.

 

  1. பிறகு அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய விடவும். எண்ணெய் காய்ந்ததும் ஆதில் சிக்கன் துண்டடுகளை போட்டு தொடர்ந்து தனியாத்தூள், சீரகத்தூள், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.

 

  1. பன்னீர் துண்டுகளையும், வட்டமாக நறுக்கிய குடைமிளகாயயையும் சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் தக்காளிசாஸ், சோயாசாஸ் ஊற்றி கிளறவும். சுவையான சிக்கன் பன்னீர் கிரேவி தயார்.

Leave a Reply

Your email address will not be published.