சிக்கன் மிளகு குழம்பு

தயிர் சிக்கன் கிரேவி

 

 

தேவையான பொருட்கள்  :

 

கோழி கறி துண்டுகள்              – 5 சிறியளவு

மிளகு                             – 15

வெங்காயம்                 – 1

இஞ்சி                      – 1 துண்டு

தனியாத் தூள்              – 1 டேபிள் கரண்டி

மிளகாய்த் தூள்             – 1 கரண்டி

மஞ்சள் தூள்               – 2 கரண்டி

வெண்ணெய்                – 100 கிராம்

எலுமிச்சம் பழச்சாறு        – சிறிதளவு

உப்பு                       – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். ஒரு பாத்திரத்தில் சிக்கன் துண்டுகளை தண்ணீரில் 10 நிமிடம் வேக வைக்கவும். பிறகு மிளகைத் தூள் செய்து அதனுடன் மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் கலந்து துவையல் போல் பிசைந்து கொள்ளவும்.

 

  1. சிக்கனுடன் கலந்து வைத்திருக்கும் மசாலாவையும் சேர்த்து நன்றாக கிளறவும். சிக்கனை மிருதுவாக வெந்த்ததும் இறக்கவும். ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் அரிந்த வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

 

  1. இறக்கி வைத்த சிக்கன் குழம்பை கடாயில் ஊற்றவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். சுவையான சிக்கன் மிளகு குழம்பு தயார்.

Leave a Reply

Your email address will not be published.