சில்லி சிக்கன் குழம்பு

settinadu koli

 

தேவையான பொருட்கள்  :

 

சிக்கன்                     – ½ கிலோ

தயிர்                       – ½ கப்

பூண்டு                      – 6 பல்

குடைமிளகாய்              – 2

பச்சை மிளகாய்             – 2

தக்காளி                    – 1

வெங்காயம்                 – 1

கொத்தமல்லி               – சிறிதளவு

இஞ்சி, பூண்டு விழுது       – 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள்              – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்               – ½ தேக்கரண்டி

கறிக்குழம்பு கரம் மசாலா   – 1 டேபிள் கரண்டி

உப்பு                       – 1½ தேக்கரண்டி

எண்ணெய்                  – தேவையான அளவு

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு சிக்கனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி அதை தயிர், அரை தேக்கரண்டி உப்பு மற்றும் மஞ்சள்த்தூள், கலந்து பிரிட்ஜில் அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

 

  1. வெங்காயம், தக்காளி, குடைமிளகாயை நறுக்கிக்கொள்ளவும். பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு அதில் வெங்காயம், பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

 

  1. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். இதனுடன் பிரிட்ஜில் ஊற வைத்த சிக்கனை போட்டு ஐந்து நிமிடங்கள் வரை வதக்கவும். பிறகு தக்காளியை சேர்த்து வதக்கவும்.

 

  1. தக்காளி வதங்கியதும் மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும். தொடர்ந்து மூன்று கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். ஒரு கொதிவந்தவுடன் குடைமிளகாயைச் சேர்க்கவும்.

 

  1. சிக்கன் நன்றாக வெந்தவுடன் குழம்பில் நறுக்கிய பூண்டு, கோழிக்குழம்பு கரம் மசாலாத்தூள் சேர்த்து கலக்கவும். நல்ல வாசனைக்கு கொத்துமல்லி தூவி இறக்கவும். சுவையான சில்லி சிக்கன் குழம்பு தயார்.

Leave a Reply

Your email address will not be published.