சுறாமீன் குழம்பு

shark

 

 

தேவையான பொருட்கள்  :

 

சுறாமீன்             – ½ கிலோ (தோல் உரித்தது)

மிளகு                      – 50 கிராம்

சீரகம்               – 20 கிராம்

புளி                 – 100 கிராம்

பூண்டு               – 100 கிராம் (பொடித்தது)

சின்ன வெங்காயம்   – 150 கிராம் (பொடியாக நறுக்கியது)

நாட்டுத் தக்காளி     – 150 கிராம் (பொடியாக நறுக்கியது)

மல்லித் தூள்        – 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள்        – ½ தேக்கரண்டி

சோம்பு              – ½ தேக்கரண்டி

உப்பு                – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம்  :

 

  1. முதலில் சுறாமீனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். ஒரு கடாயில் சீரகம், மிளகு இரண்டையும் தனித்தனியாக வறுத்து மிக்ஸ்சியில் பொடிக்கவும். புளியை கரைத்து அதில் பாதி உப்பு, மல்லித்தூள், மஞ்சள் தூள் சேர்த்து தனியாக கலக்கி வைக்கவும்.

 

  1. பிறகு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம், வெந்தயம், தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி, சேர்த்து நன்றாக வதக்கவும்.

 

  1. நன்றாக வதங்கியதும் அதில் கரைத்த புளி தண்ணீரை ஊற்றி, தனியாதூள், மஞ்சள் தூள் போட்டுக் பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். பச்சை வாசனை போன பின், வறுத்து பொடி செய்ததை போட்டு நன்றாக கலக்கவும்.

 

  1. பிறகு அதில் மீனைப்போட்டு மூடிவிடவும். மீன் நன்றாக வெந்ததும் கொத்தமல்லித் தலை, கறிவேப்பிலை தூவி இறக்கவும். சுவையான சுறாமீன் குழம்பு தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.