செட்டிநாட்டு சிக்கன் குழம்பு

chettinadu chicken

 

 

தேவையான பொருட்கள் :

 

சிக்கன்                     – ½ கிலோ

வெங்காயம்                 – 1

தக்காளி                    – 2

கெட்டி தேங்காய்ப் பால்     – 1 கப்

இஞ்சி பூண்டு விழுது        – 1 டேபிள்கரண்டி

கறிவேப்பில்லை            – சிறிதளவு

உப்பு,எண்ணெய்             – தேவையான அளவு

 

எண்ணெயில் வதக்கி அரைக்க தேவையான பொருட்கள்  :

 

சின்ன வெங்காயம் – 20

 

வறுத்து பொடிக்க தேவையான பொருட்கள்  :

 

தனியா              – 2½ டேபிள்கரண்டி

பட்டை              – 1 சிறு துண்டு

சீரகம்               – 1 தேக்கரண்டி

சோம்பு              – 1 தேக்கரண்டி

கசகசா              – 1 தேக்கரண்டி

மிளகு                      – 1 தேக்கரண்டி

கறிவேப்பில்லை     – சிறிதளவு

காய்ந்த மிளகாய்     – 10

கிராம்பு              – 5

 

செய்முறை விளக்கம்  :

 

  1. முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றாமல் பட்டை, தனியா, சீரகம், சோம்பு, கசகசா, மிளகு, கருவேப்பிலை காய்ந்த மிளகாய் மற்றும் கிராம்பு போட்டு வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும்.

 

  1. பிறகு சுத்தம் செய்த சிக்கனை குக்கரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து இரண்டு விசில் வரை வேகவைக்கவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், கரிவேப்பில்லை, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் தக்காளியை ஒவ்வொன்றாக போட்டு வதக்கவும்.

 

  1. பின்னர் சின்ன வெங்காய விழுது, வறுத்தரைத்த பொடி, உப்பு சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை கிளறவும். பச்சை வாசனை போனதும் வேக வைத்த தண்ணீரோடு சிக்கனை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும். கொதித்ததும் தேங்காய்ப் பாலை ஊற்றி 5 நிமிடங்கள் வரை கொதித்ததும் இறக்கவும். சுவையான செட்டிநாட்டு சிக்கன் குழம்பு தயார்.

Leave a Reply

Your email address will not be published.