சேலம் மட்டன் குழம்பு

சேலம் மட்டன் குழம்பு

தேவையானவை :

 

மட்டன்              – ¾ கிலோ

சின்ன வெங்காயம்   – ½ கிலோ

தக்காளி             – 1

காய்ந்த மிளகாய்     – 10

கிராம்பு              – 2

ஏலக்காய்            – 2

கறிவேப்பிலை       – 20

தேங்காய்            – 1 மூடி

பூண்டு               – 25 பல்

எண்ணெய்           – 4 ஸ்பூன்

மிளகு                      – 1 தேக்கரண்டி

சீரகம்               – 1 தேக்கரண்டி

சோம்பு              – 1 தேக்கரண்டி

கசகசா              – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்        – 1 தேக்கரண்டி

பிரிஞ்சி இலை       – சிறிதளவு

பட்டை              – சிறிதளவு

தனியா தூள்         – 2 டேபிள் ஸ்பூன்

இஞ்சி               – 2 அங்குல துண்டு

உப்பு                – தேவையான அளவு

 

செய்முறை :

 

  1. முதலில் மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு மிக்ஸ்சியில் 15 பல் பூண்டு மற்றும் இஞ்சியை விழுதாக அரைக்கவும். பிறகு குக்கரில் மட்டனை போட்டு சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், பாதி இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, ஐந்து விசில் வரும் வரை வேகவிடவும். 8 வெங்காயத்தை மட்டும் தனியாக வைத்துக் கொண்டு இரண்டாக வெட்டவும்.

 

  1. ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய், பாதி கறிவேப்பிலை, சீரகம் மற்றும் மிளகை வறுக்கவும். அதே எண்ணெயில், மீதி வெங்காயத்தை (8 தவிர்த்து) வதக்கவும்.

 

  1. பிறகு வெறும் கடாயில் சோம்பு, கசகசா மற்றும் தேங்காயயை லேசாக வறுக்கவும். வறுத்தவைகளை தனி தனியாக மிக்ஸியில் அரைக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மீதி எண்ணெயை ஊற்றி காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும், பிரிஞ்சி இலையை சேர்க்கவும்.

 

  1. பொரிந்தவுடன் இரண்டாக வெட்டி வைத்த 8 வெங்காயம், பூண்டு, மீதி உள்ள இஞ்சி, பூண்டு விழுதயும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன், தக்காளி, மீதி கருவேப்பிலை, மட்டன் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

 

  1. வதக்கிய பின், அரைத்து வைத்துள்ள மிளகாய் மற்றும் சீரகம், மிளகு,தனியா தூள் சேர்த்து, ஐந்து  நிமிடங்கள் வரை வதக்கவும். பிறகு அரைத்த வெங்காய விழுதை, தண்ணீரில் கரைத்து ஊற்றவும். தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விடவும்.

 

  1. நன்றாக கொதித்த பின், அரைத்த தேங்காய், கசகசா விழுதை கெட்டியாக கரைத்து ஊற்றவும். ஐந்து நிமிடம் கொதித்த பின் இறக்கவும். சுவையான சேலம் மட்டன் குழம்பு தயார்.

Leave a Reply

Your email address will not be published.