சேலம் மீன் குழம்பு

சேலம் மீன் குழம்பு

 

 

தேவையான பொருட்கள்  :

 

மீன்                 – ½ கிலோ

தக்காளி             – 1

சின்ன வெங்காயம்   – 10

பூண்டு               – 8 பல்

வெந்தயம்           – 1 தேக்கரண்டி

நல்லெண்ணெய்      – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்        – ½ தேக்கரண்டி

புளி                 – தேவையான அளவு

உப்பு                – தேவையான அளவு

 

வதக்கி அரைக்க தேவையான பொருட்கள்  :

 

தக்காளி             – 2

சின்ன வெங்காயம்   – 15

பூண்டு               – 10 பல்

தேங்காய் துருவல்   – ¼ மூடி

சீரகம்               – 1 தேக்கரண்டி

மிளகு                      – 1 தேக்கரண்டி

மிளகாய் தூள்       – 2 தேக்கரண்டி

தனியா தூள்         – 1 டேபிள்கரண்டி

 

தாளிக்க தேவையான பொருட்கள்  :

 

கறிவேப்பிலை       – சிறிதளவு

கடுகு                – ½ தேக்கரண்டி

சீரகம்               – ¼ தேக்கரண்டி

வெந்தயம்           – ¼ தேக்கரண்டி

எண்ணெய்           – 1 டேபிள் கரண்டி

 

செய்முறை விளக்கம்  :

 

  1. முதலில் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு ஒரு பாத்திரத்தில் மீனை போட்டு உப்பு, மஞ்சள் தூள் தேய்த்து நன்றாக கழுவி வைக்கவும். தக்காளியை பெரிய துண்டுகளாகவும், வெங்காயம், பூண்டை இரண்டாகவும் நறுக்கவும்.

 

  1. புளியை ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டவும். வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து, நைசாக பொடிக்கவும். ஒரு பாத்திரத்தில் அரை கரண்டி எண்ணெய் ஊற்றி காயாவிடவும். காய்ந்ததும் மிளகு, சீரகம், வெங்காயம், பூண்டு, தக்காளி மற்றும் தேங்காய் சேர்த்து வதக்கவும்.

 

  1. இதனுடன் தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். ஆறியதும் விழுது போல் மிக்ஸியில் நன்றாக அரைத்து புளிகரைசலுடன் சேர்த்து கரைக்கவும்.

 

  1. பிறகு மீதி எண்ணெயை கடாயில் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை தாளிக்கவும். தொடர்ந்து இரண்டாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

 

  1. வதங்கியதும் கரைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும். கெட்டியானதும் சுத்தம் செய்த மீனை குழம்பில் போடவும்.

 

  1. மீன் குழம்பில் வெந்ததும், பொடித்து வைத்துள்ள வெந்தயத்தை குழம்பில் போட்டு இறக்கவும். நல்லெண்ணையை குழம்புக் கரண்டியில் ஊற்றி, அடுப்பில் வைத்து நன்கு சூடேறியதும் கரண்டியோடு குழம்புக்குள் விட்டு கலக்கிய மூடவும். சுவையான மணமான மீன் குழம்பு தயார்.

Leave a Reply

Your email address will not be published.