சைனீஸ் மட்டன்

சைனீஸ் மட்டன்

 

தேவையான பொருட்கள் :

 

எழுமிச்சை இலை    – 8

மட்டன்              – ¼ கிலோ

பச்சை பட்டானி      – 50 கிராம்

சிகப்பு மொச்சை     – 50 கிராம்

உருளை கிழங்கு     – 100 கிராம்

கேரட்               – 100 கிராம்

அஜினோ மோட்டோ – 2 சிட்டிகை

குழம்பு மசாலா தூள்        – 2 தேக்கரண்டி

மிளகாய்ப்பொடி      – 1 தேக்கரண்டி

தக்காளி பேஸ்ட்     – 2 டேபிள் கரண்டி

உப்பு                – தேவையன அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். மொச்சையை இரண்டு மணி நேரம் ஊரவைக்கவும். ஊறவைத்த மொச்சையை குக்கரில் போட்டு வேக வைக்கவும். வெந்ததும் தண்ணீரை வடிகட்டவும். பிறகு குக்கரில் மட்டனை போட்டு  அதில் ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி, குழம்புத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வரை வேகவிடவும்.

 

  1. நன்றாக வெந்தவுடன் அதில் மொச்சைக்கொட்டை, பட்டானி, உருளை கிழங்கு, கேரட், தக்காளி பேஸ்ட் மற்றும் மிளகாய்ப்பொடி போட்டு வேகவிடவும். காய்கள் ஓரளவு வெந்ததும் அதில் எழுமிச்சை இலை, அஜினோமோட்டோவை போடவும். நன்றாக கொதித்தவுடன் இறக்கவும். சுவையான சைனீஸ் மட்டன் சாப்பிட தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.