டயட் கோழிக் குழம்பு

mutton salna

 

தேவையான பொருட்கள் :

 

கோழி                      – ½ கிலோ (தோல் கொழுப்பு நீக்கியது)

பச்சை மிளகாய்      – 2

சின்ன வெங்காயம்   – 30

ஏலக்காய்            – 2

கிராம்பு              – 2

கறிவேப்பிலை       – 2 கொத்து

மல்லிக்கீரை         – 1 கொத்து

பட்டை              – 1 இன்ச் துண்டு

தக்காளி             – 1 (நறுக்கியது)

சோம்பு              – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்        – ¼ தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் கரண்டி

மிளகாய் தூள்       – 1 டேபிள் கரண்டி

மல்லித் தூள்        – 1½ டேபிள் கரண்டி

எண்ணெய்           – 1½ டேபிள் கரண்டி

உப்பு                – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம்  :

 

  1. முதலில் கோழியை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு கோழியை மஞ்சள் தூள், வினிகர் சேர்த்து சுத்தம் செய்யவும். ஒரு பாத்திரத்தில் அரை டேபிள்கரண்டி எண்ணெய் ஊற்றி காயவிடவும். காய்ந்ததும் 20 சின்ன வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும்.

 

  1. முக்கால் வாசி வதங்கியதும் சோம்பு போட்டு மேலும் சிறிது நேரம் வதக்கவும். பின் மிதமான தீயில் அடுப்பை வைத்து மிளகாய்தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறவும். கிளறியவுடனேயே அடுப்பை அணைத்து விடவும். வாணலியின் சூட்டிலேயே பொடிகள் வறுபட்டு விடும்.

 

  1. பிறகு மசாலா நன்றாக ஆறியவுடன் மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். ஒரு குக்கரில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி காயவிட்டு அதில் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காயயை போட்டு தாளிக்கவும்.

 

  1. ஏலக்காய் வெடித்ததும் இஞ்சி, பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாடை போகும் வரை சிறிது நேரம் வதக்கவும். வதங்கியதும் மீதமுள்ள சின்ன வெங்காயத்தயும் சேர்த்து வதக்கவும்.

 

  1. வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். தக்காளி குழைந்தவுடன் கோழித்துண்டுகளையும் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

 

  1. அரைத்து வைத்த மசாலா கலவையுடன், மஞ்சள் தூள், அரைக் கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். பிறகு குக்கரை மூடிவிட்டு மிதமான தீயில் 5 விசில் வரை  வேக விடவும். குக்கரில் ஆவி இறங்கியதும் மல்லித்தழையை தூவி கிளறி விடவும். சுவையான டயட் கோழிக் குழம்பு தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.