தம் முட்டை குழம்பு  

tham muttai

 

தேவையான பொருட்கள் :

 

தம் முட்டைக்கு தேவையான பொருட்கள் :

 

கோழி முட்டை       – 3

சோம்பு              – ½ தேக்கரண்டி

சீரக தூள்            – ½ தேக்கரண்டி

மிளகாய் தூள்       – ½ தேக்கரண்டி

உப்பு                – ¼ தேக்கரண்டி

 

குழம்பிற்கு தேவையான பொருட்கள் :

 

பச்சை மிளகாய்      – 1

சின்ன வெங்காயம்   – 5

கறிவேப்பிலை       – 1 பிடி

புளி                 – 1 எலுமிச்சை அளவு

தேங்காய்            – 5 டேபிள் கரண்டி

மிளகாய் தூள்       – 1 தேக்கரண்டி

மல்லிதூள்           – 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்        – ½ தேக்கரண்டி

மிளகு தூள்          – ½ தேக்கரண்டி

சோம்பு,சீரகம்        – ½ தேக்கரண்டி

உப்பு                – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம்  :

 

  1. ஒரு பாத்திரத்தில் முட்டை, சோம்பு, சீரக தூள், மிளகாய் தூள், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக அடித்து, ஒரு கின்ணத்தில் ஊற்றி இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி போட்டு நீராவியில் வேக வைக்கவும்.

 

  1. முட்டை வெந்தவுடன் வெளியில் வைத்து ஆற வைக்கவும். ஆறிய முட்டையை துண்டுகளாக கத்தியால் வெட்டவும். குழம்பிற்கு தேவையான பொருட்கள் பச்சை மிளகாய், கறிவேப்பிலை தவிர மீதம் இருக்கும்  மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் , மிளகு தூள், சோம்பு, சீரகம், தேங்காய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலையை ஆகியவற்றை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.

 

  1. புளியை தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி ஒரு கப்பு புளிக்கரைசல் எடுத்து வைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் புளிச்சாறு, தேவையான அளவு உப்பு, அரைத்து வைத்திருக்கும் விழுது, கறிவேப்பிலை, பச்ச மிளகாய் இரண்டாக நீளவாக்கில் நறுக்கியதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.

 

  1. பச்ச வாசனை போனவுடன் முட்டையைப் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். சுவையான தம் முட்டை குழம்பு தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.