தயிர் சிக்கன் கிரேவி

தயிர் சிக்கன் கிரேவி

 

 

தேவையான பொருட்கள்  :

 

கோழி                             – ½ கிலோ

தயிர்                       – 1 கப்

வெங்காயம்                 – 3

தக்காளி                    – 3

பச்சை மிளகாய்             – 2

மிளகாய்த்தூள்              – 1 கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது       – 1 கரண்டி

மஞ்சள்த்தூள்                      – 1 கரண்டி

தனியாத்தூள்               – 1 கரண்டி

சீரகத்தூள்                  – 1 கரண்டி

எண்ணெய்                  – தேவையான அளவு

உப்பு                       – தேவையான அளவு

 

 செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். மிக்சியில் வெங்காயம், தக்காளியையும் தனி தனியாக அரைக்கவும்.

 

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது, பச்சைமிளகாய், மிளகாய்த் தூள், மஞ்சள்த் தூள், எல்லாவற்றையும் போட்டு, அரைத்த தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

 

  1. நன்றாக வதங்கியவுடன் வெட்டிய கோழிக்கிகறியை தனியாத்தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு போட்டு, நன்கு கொதித்தவுடன் தயிரை ஊற்றி கொதிக்கவிடவும்.

 

  1. குழம்பு கெட்டியான பதத்திற்க்கு வந்ததும் இறக்கி பரிமாறவும். சுவையான தயிர் சிக்கன் கிரேவி தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.