தேங்காய்பால் மீன் சால்னா

fishd

 

 

தேவையான பொருட்கள்  :

 

மீன்                    – 1/2 கிலோ

எலுமிச்சை பழம்       – 1

தக்காளி                – 2

வெங்காயம்            – 1

பூண்டு                  – 1

பச்சை மிளகாய்        – 2

தேங்காய்பால்          – 3 கப்

வெந்தயம்              – 1 ஸ்பூன்

மிளகாய் தூள்          – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள்           – 1 சிட்டிகை

மல்லி தூள்            – 2 ஸ்பூன்

மிளகு, சீரகத்தூள்      – 1 ஸ்பூன்

மல்லி தலை           – 1 கட்டு

எண்ணெய்              – 3 ஸ்பூன்

உப்பு                   – தேவைகேற்ப

 

 

செய்முறை விளக்கம் :

 

  1. மீனை துண்டுகளாக்கி கழுவி சுத்தம் செய்யவும். தேங்காயை துருவி அரைத்து தேங்காய்ப்பால் எடுக்கவும். வெங்காயம், பாதி அளவு பூண்டு இரண்டையும் நசுக்கிக் வைக்கவும். தக்காளியையும் மீதியுள்ள பூண்டையும் நறுக்கி தனியாக வைக்கவும்.

 

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம் போடவும். பிறகு நசுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டை போட்டு தளிக்கவும் பொன்னிறமாக வந்தவுடன் மிளகாய் தூள் போட்டு, நறுக்கி வைத்துள்ள தக்காளியையும் பூண்டையும் இதனுடன் சேர்த்து வதக்கவும்.

 

  1. மசாலா நன்கு வதங்கி பச்சை வாடை போனதும் எடுத்து வைத்துள்ள தேங்காய்பாலில் மஞ்சள் தூள், மல்லிதூள், மிளகு தூள், சீரகத்தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, பச்சை மிளகாயை அதில் கிள்ளி போட்டு தாளித்ததில் ஊற்றிய பின் , மீன் துண்டுகளையும் மெதுவாக போட்டு வேகவிட வேண்டும்.

 

  1. வெந்தவுடன் எலுமிச்சை பழத்தை குழம்பில் பிழிந்து விடவும், பிறகு மல்லி தலையையும் பொடியாக நறுக்கி குழம்பில் தூவி விட்டு இறக்கலாம். சுவையான தேங்காய்ப்பால் மீன் சால்னா தயார்.

Leave a Reply

Your email address will not be published.