பிளாஸ்டிக் பாட்டில்கள்.

Water bottles

நாம் அன்றாடம் குளிர் பானங்கள் குடிக்கிறோம்.  பிரசித்திபெற்ற நிறுவனங்களின் பாட்டில்களில் வரும் தண்ணீரையும் வாங்கி குடிக்கிறோம்.  குடித்த பின்பு காலியாக உள்ள அந்த பாட்டில்களில் தண்ணீரை ஊற்றி குளிர் சாதன பெட்டியில் குளிர்ச்சி படுத்தி மறுமுறை உபயோகிக்கிறோம். இது அனைவரும் செய்கின்ற ஒன்று தான் .இது பற்றிய கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில் பிளாஸ்டிக் பாட்டில்கள் ஒவ்வொன்றும் தரம் பிரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.  அவற்றின் தரம் பிளாஸ்டிக் பாட்ழல்களின் அடிப்பகுதியில் ஒரு முக்கோணத்தில் 1,2,3.4.5.6 என்று ஏதாவது ஒரு எண் குறிப்பிடப் பட்டிருக்கும். பொதுவாக எல்லா நிறுவன தண்ணீர் பாட்டில்களிலும் 1 ஆம் எண் போடப்பட்டிருக்கும்.

இந்த 1 ஆம் எண் உள்ள பாட்டில்களை ஒரு தடவைக்கு மேல் பயன்படுத்தக்கூடாது.  இதில் தண்ணீர் நிரப்பி ப்ரிட்ஜ்ஜில் வைத்து குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கை உண்டு பண்ணும். அடிப்பகுதியில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிடப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை தண்ணீர் நிரப்பி குடிக்க உபயோகப்படுத்தலாம்.

5 அல்லது அதற்கு மேற்பட்ட எண்கள் பொறிக்கப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை  பள்ளிக்கூடத்திற்குசெல்லும் குழந்தைகளுக்கு  தண்ணீர் கொடுத்து அனுப்பும் பாட்டிலாக உபயோகப்படுத்தலாம்.1,2,3,4 ஆம் எண் உள்ள பாட்டில்களை மறுமுறை உபயோகிக்கும் பாட்டில்களாக பயன்படுத்தக்கூடாது. ஏன்! நாமும் தண்ணீர் பாட்டில்களாக உபயோகப்படுத்தக் கூடாது.  கண்ணாடி பாட்டில்கள் அல்லது எவர்சில்வர் பாட்டில்களை தண்ணீர் பாட்டில்களாக பயன்படுத்துவது மிகவும் நல்லது.

தற்போது பீடிங் பாட்டில்கள் கூட மட்டமான பிளாஸ்டிக் பாட்டில்களாக வருகின்றன.  குழந்தைகளின் உயிரோடு விளையாடும் நமது மனப்போக்கினை என்ன என்று சொல்ல.

நமக்கு தெரிந்தவர்களிடம் இதுபற்றி தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது நமது கடமையாகும்.

Leave a Reply

Your email address will not be published.