செட்டிநாட்டு நாட்டுக்கோழி குழம்பு

settinadu koli

 

தேவையான பொருட்கள்  :

 

நாட்டுக் கோழி கறி     – 1 கிலோ

தக்காளி                – 2

சின்ன வெங்காயம்     – 100 கிராம்

எண்ணெய்              – 3 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை          – 2 கொத்து

பட்டை                 – தாளிக்க

கிராம்பு, பிரிஞ்சி இலை – தாளிக்க

அன்னாசிப் பூ           – தாளிக்க

உப்பு                   – 1½ மேசைக்கரண்டி

 

அரைக்க தேவையான பொருட்கள்  :

 

வர மிளகாய்           – 15

பூண்டு                  – 6 பெரிய பல்

இஞ்சி                  – 5 கிராம்

சோம்பு                         – 1 மேசைக்கரண்டி

தேங்காய் துருவல்      – 3 மேசைக்கரண்டி

சீரகம்                  – 1 மேசைக்கரண்டி

மஞ்சள் பொடி          – 1 1/2 மேசைக்கரண்டி

மல்லி விதை           – 2 1/2 மேசைக்கரண்டி

கசகசா                         – 1 தேக்கரண்டி

 

செய்முறை விளக்கம்:

 

  1. சிறிய துண்டங்களாக வெட்டிய கோழிக் கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். அதனுடன் அரை மேசைக்கரண்டி மஞ்சள் பொடி சேர்த்து நன்றாக பிரட்டி வைக்கவும். பின்னர் சீரகம், சோம்பு ஒரு மேசைக்கரண்டி, மஞ்சள் பொடி, இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸ்சியில் விழுதாக அரைக்கவும். மிளகாய், மல்லியை தனியாக விழுதாக அரைக்கவும், தேங்காய் துருவல் மற்றும் கசகசாவை தனியாக விழுதாக அரைக்கவும்.

 

  1. வெங்காயத்தையும், தக்காளியையும் தனியாக நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணை ஊற்றி தாளிக்க வைத்துள்ளவற்றைப் போட்டு தாளிக்கவும். பிறகு வதங்கிய வாசனை வந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பிறகு நாட்டு கோழிக்கறியை போட்டு நன்றாக ஐந்து நிமிடத்திற்க்கு வதக்கியவுடன் தக்காளியை சேர்க்கவும்.

 

  1. மசாலாக் கலவை ஐந்து நிமிடதிதிற்க்கு வதக்கிய பிறகு நான்கு டம்ளர் தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் சோம்பு விழுது, தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடத்திற்க்கு  கொதிக்க விடவும். பின்பு மிளகாய், மல்லி கலவை சேர்த்து மீண்டும் 10 நிமிடம் கொதிக்க விடவும். இதனுடன் தேங்காய் விழுது சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும். குழம்பு வாசனை வந்ததும் இறக்கவும். சுவையான நாட்டு கோழிக்கறி குழம்பு தயார்.

Leave a Reply

Your email address will not be published.