நெ‌த்‌தி‌லி ‌மீ‌ன் குழ‌ம்பு

நெத்திலிக் கருவாட்டு குழம்பு

 

தேவையான பொருட்கள்  :

 

நெத்திலி மீன்           – 1/2 கிலோ

புளிக்கரைசல்           – 1/2 கப்

தனியா தூள்           – 2 தேக்கரண்டி

பச்சை மிளகாய்        – 6

கொத்துமல்லி          – 1 கொத்து

கறிவேப்பிலை          – 2 கொத்து

மஞ்சள் தூள்           – ¼ தேக்கரண்டி

மிளகாய் தூள்          – 2 தேக்கரண்டி

கடுகு                   – சிறிதளவு

வெந்தயம்              – சிறிதளவு

வெங்காயம்            – 3

தக்காளி                – 3

இஞ்சி, பூண்டு          – தேவையான அளவு

எண்ணெய்              – தேவையான அளவு

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம்:

 

  1. நெத்திலி மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு இ‌‌ஞ்‌சி, பூண்டு, வெ‌ங்காய‌த்தை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் ‌விழுதாக அரைத்து தனியாக வைக்கவும். பின்னர் குழம்பு வைக்க ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயத்தை போட்டு முதலில் தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டுமற்றும் வெ‌ங்காய‌ விழுதையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

 

  1. பின்னர் தக்காளியையும் சேர்த்து வதக்கவும். தக்காளி குழைவாக வதங்கியதும் கா‌ய்‌ந்த மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள் சேர்த்து மசாலா வாடை போகும் வரை வதக்கிய  பின் புளிக்கரைசளை ஊற்றவு‌ம்.

 

  1. கொத்தமல்லி, கறிவேப்பிலையையும் போட்டு நன்றாக கொதித்தவுடன் இறக்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கழுவி சுத்தமாக இருக்கும் மீனை சேர்த்து நன்றாக வெந்ததும் இறக்கவும். சுவையான நெத்திலி மீன் குழம்பு பரிமாற தயா‌ர்.

 

Leave a Reply

Your email address will not be published.