நெத்திலிக் கருவாட்டு குழம்பு

நெத்திலிக் கருவாட்டு குழம்பு

 

 

தேவையான பொருட்கள்  :

 

நெத்திலிக் கருவாடு    – 20

சுரைக்காய்             – 1 கப் (நறுக்கியது)

மஞ்சள் பொடி          – ¼ ஸ்பூன்

புளிக்கரைசல்           – ¼ கப்

உப்பு                   – தேவையான அளவு

 

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள் :

 

சின்னவெங்காயம்      – 10

தனியா                         – ½ ஸ்பூன்

காய்ந்த மிளகாய்       – 2

பூண்டு                  – 2 பல்

சீரகம்                  – ¼ ஸ்பூன்

தேங்காய் துறுவல்      – ¼ கப்

தக்காளி                – 1

எண்ணெய்              – 1 ஸ்பூன்

 

தாளிக்க தேவையான பொருட்கள்  :

 

எண்ணெய்      – 1 ஸ்பூன்

கடுகு           – 1/4 ஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

வெந்தயம்      – 1/4 ஸ்பூன்

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் வெந்நீரில் கருவாட்டை பத்து நிமிடத்திற்க்கு ஊற வைத்து நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் சின்னவெங்காயம், தனியா, காய்ந்த மிளகாய், பூண்டு, சீரகம், தேங்காய் துறுவல், தக்காளி, ஆகியவற்றை நன்றாக வறுத்து மிக்ஸியில் அரைக்கவும்.

 

  1. அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம் போட்டு தாளித்தவுடன், கறிவேப்பிலை போட்டு சுரைக்காயை போடவும். காய் நன்றாக வதங்கியவுடன் அரைத்த விழுது மற்றும் புளிக்கரைசளையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மஞ்சள்த்தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

 

காய் வெந்தவுடன் கருவாட்டை சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்கவிடவும். குழம்பு கொதித்து சற்று கெட்டியானதும் இறக்கி பரிமாறவும். சுவையான நெத்திலிக் கருவாட்டு குழம்பு தயார்

Leave a Reply

Your email address will not be published.