மட்டன் சாப்ஸ் குழம்பு

மட்டன் சாப்ஸ் குழம்பு

 

தேவையான பொருட்கள்  :

 

மட்டன்         – 500 கிராம்

வெங்காயம்    – 25

தக்காளி        – 2

பட்டை                 – 1

தனியா தூள்   – 1 தேக்கரண்டி

கருவேப்பிலை – சிறிதளவு

சோம்பு                 – 1/2 தேக்கரண்டி

எண்ணெய்      – 50 கிராம்

உப்பு           – தேவையான அளவு

 

அரைக்க தேவையான பொருட்கள்  :

 

மிளகாய்       – 12

மிளகு          – 1 தேக்கரண்டி

சீரகம்          – 1 தேக்கரண்டி

சோம்பு                 – 1 தேக்கரண்டி

பட்டை                 – 1

கிராம்பு                 – 1

ஏலக்காய்       – 1

கசகசா                 – 1 தேக்கரண்டி

தேங்காய்       – 4 துண்டு

இஞ்சி          – சிறிதளவு

பூண்டு          – 8 துண்டு

மஞ்சள் தூள்   – 1 தேக்கரண்டி

 

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் மட்டனை சுத்தம் செய்து வைக்கவும். பிறகு அரைக்க தேவையான பொருட்களான மிளகாய், மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கசகசா, தேங்காய், இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள், ஆகியவற்றை மிக்ஸியில் அரைக்கவும்.

 

  1. பின்னர் அரைத்த விழுதை மட்டனில் பிரட்டி ஒரு மணி நேரத்திற்க்கு ஊற வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, சோம்பு தாளித்து நருக்கிய வெங்காயம்,தக்காளியை சேர்த்து வதக்கவும். பின்பு ஊற வைத்திருக்கும் மட்டன் கலவையை போட்டு, தனியா தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

 

  1. கறி தீய்ந்து போகாமல் பிரட்டினால் எண்ணெய் மேலே பிரிந்து வரும். இந்த கலவையுடன் தேவையான அளவு தண்ணீரையும், உப்பையும் சேர்த்து கிளறி விட்டு, கடாயை மூடியை போட்டு மட்டனை வேக வைக்கவும். கறி வெந்து குழம்பு கெட்டியானவுடன் இறக்க வேண்டும். சுவையான மட்டன் சாப்ஸ் குழம்பு தயார்.

Leave a Reply

Your email address will not be published.