மட்டன் சால்னா

mutton salna

 

தேவையான பொருட்கள்  :

 

ஆட்டுக் கறி            – ½ கிலோ

காய்ந்த மிளகாய்       – 2 (தாளிக்க)

காய்ந்த மிளகாய்       – 6 (வறுத்து அரைக்க)

சின்ன வெங்காயம்     – 150g

தக்காளி                – 150g

தேங்காய்               – ¼ மூடி

தனியா                         – 1 மேசைக்கரண்டி

சீரகம்                  – ½ தேக்கரண்டி

மஞ்சள் தூள்           – 1 சிட்டிகை

கறிவேப்பிலை          – 1 கொத்து

கொத்தமல்லி           – சிறிதளவு

எண்ணெய்              – 1 மேசைக்கரண்டி

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. மட்டனை கழுவி நன்றாக சுத்தம் செய்யவும். பிறகு ஒரு கடாயில் காய்ந்த மிளகாய், தனியா, சீரகம் ஆகியவற்றை பொன்னிறமாக வறுக்கவும். இதை தேங்காயுடன் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

 

  1. குக்கரில் எண்ணெயைக் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய், கறிவேப்பிலையைப் போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும். பின்னர் மட்டனை கொட்டி வதக்கி விடவும்.

 

  1. மட்டன் நன்றாக வதங்கியதும் அரைத்த மசாலாவைப் சேர்த்து மஞ்சள் பொடி, உப்பு சிறிதளவு சேர்த்து தண்ணீரை ஊற்றி வேக விடவும். மட்டன் வெந்ததும் கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். பரிமாற சுவையான மட்டன் சல்னா தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.