மட்டன் சொதி வறுவல்

mutton

 

தேவையான பொருட்கள் :

 

மட்டன்                 – 1/4 கி,

தேங்காய்               – 1 மூடி,

எலுமிச்சம் பழம்                – 1 மூடி,

பட்டை                         – 1 துண்டு,

கிராம்பு                         – 2

பச்சை மிளகாய்        – 2 (நீளமாக நறுக்கியது),

சின்ன வெங்காயம்     – 8 (நீளமாக நறுக்கியது),

புளி                    – 1 நெல்லிக்காயளவு,

இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி,

மஞ்சள் பொடி          – 1/2 தேக்கரண்டி,

மிளகு                  – 1/2 தேக்கரண்டி,

சீரகம்                  – 1/2 தேக்கரண்டி,

சோம்பு                         – 2 தேக்கரண்டி,

மல்லி                  – 2 தேக்கரண்டி,

கறிவேப்பிலை          – தேவையான அளவு,

உப்பு                   – தேவையான அளவு.

 

செய்முறை விளக்கம் :

 

  1. மட்டன் துண்டுகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து தனியாக வைக்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, சீரகம், சோம்பு, மல்லி ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். குக்கரில் மட்டன், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்பொடி, மூன்று கப் தண்ணீர் சேர்த்து ஆறு விசில் வரும் வரை வேக விடவும்.

 

  1. குக்கரின் ஆவி போனதும் மட்டனை தனியாகவும் வேக வைத்த தண்ணீரை தனியாகவும் எடுத்து வைக்கவும். சொதி தயாரிப்பதற்க்கு மட்டன் வேக வைத்த தண்ணீர் மட்டுமே போதுமானது. தேங்காயை துருவி மிக்ஸியில் அரைத்து முதல் பால் 1 கப் எடுக்கவும் .இரண்டாவது பால் 3 கப் எடுக்கவும்.

 

  1. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அரை தேக்கரண்டி சோம்பு தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். மட்டனையும் சேர்த்து வதக்கவும். பிறகு கறி வேக வைத்த தண்ணீர், இரண்டாவது தேங்காய் பால், அரைத்து வைத்திருக்கும் மசாலா ஆகியவற்றை சேர்த்து இதனுடன் நன்றாக கலக்கவும்.

 

  1. பிறகு இதனுடன் கலந்து வைத்திருக்கும் சொதியை ஊற்றவும். பின் புளியை உருண்டையாக உருட்டி சொதியில் போடவும் தேவையான அளவு உப்பு சேர்த்து பதினைந்து நிமிடம் கொதிக்க விடவும். பின்பு இறக்கி முதல் தேங்காய்பாலை சொதியில் ஊற்றவும். சிறிது நேரம் கழித்து  எலுமிச்சம் பழம் சாற்றை பிழிந்து விடவும்.

Leave a Reply

Your email address will not be published.