மாங்காய் மீன் குழம்பு

mango

 

தேவையான பொருட்கள் ;

 

மீன்                            – 1/2 கிலோ

மாங்காய்                       – 1

சின்ன வெங்காயம்             – 15

தக்காளி                        – 2

பச்சை மிளகாய்                        – 2

இஞ்சி                          – சிறியதுண்டு

பூண்டு                          – 6 பல்

கருவேப்பிலை                  – சிறிதளவு

கொத்தமல்லி                   – சிறிதளவு

புளி                            – சிறிய எலுமிச்சை அளவு

எண்ணெய்                      – 4 மேசைக்கரண்டி

கடுகு                           – ½ ஸ்பூன்

வெந்தயம்                      – ½ ஸ்பூன்

மிளகாய்த்தூள்                 – 1 ½ தேக்கரண்டி

மல்லித்தூள்                    – 3 தேக்கரண்டி

சீரகத்தூள்                      – 1/4 ஸ்பூன்

மிளகுத்தூள்                    – 1/4 ஸ்பூன்

மஞ்சள் தூள்                   – 1/2 ஸ்பூன்

தேங்காய்ப் பால்                – 1 சிறிய கப்

உப்பு                           – தேவைக்கேற்ப

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் மீனை சுத்தம் செய்து கழுவவும். மீண்டும் இதை மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு போட்டு அலசவும். அப்போது தான் குழம்பு ருசியாக இருக்கும். வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு மற்றும் கொத்தமல்லி இலையை பொடியாக நறுக்கி வைக்கவும். சிறிய மாங்காய் ஒன்றை ஓரளவு பெரிய துண்டுகளாக நறுக்கவும். புளியை ஊற வைத்து கரைக்கவும். பிறகு தேங்காயையும் தனியாக அரைக்கவும்.

 

  1. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கருவேப்பிலையை போட்டு தாளிக்கவும். அத்துடன் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். தக்காளி, பச்சை மிளகாய், தேவையான அளவு உப்பு போட்டு  மூடி வைக்கவும்.

 

  1. நன்றாக மசியும் வரை காத்திருக்கவும் அப்போதுதான் சுவை கூடும். அத்துடன் மிளகாய்த் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகுத் தூளையும் சேர்த்து வதக்கி கரைத்த வைத்துள்ள புளிக்கரைசலை இதனுடன் ஊற்றி கொதிக்க விடவும். பச்சை மசாலா வாடை போனதும் நல்ல குழம்பு வாசனை வரும் போது மீனை ஓவ்வொன்றாக மெதுவாக போடவும்.

 

  1. மீனை சேர்த்த பிறகு மூடி விடவும், பின்னர் ஒரு கொதி வந்தவுடனே நறுக்கிய மாங்காய் துண்டுகளை மெதுவாக போடவும். மாங்காயையும் மீனையும் ஒன்றாக சேர்ந்து சிறிது நேரம் வேகவிடவும். பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்க்கவும்.

 

  1. நன்றாக குழம்பு கொதி வந்ததும் அடுப்பின் தீயை குறைத்து வைக்கவும். குழம்பு நன்றாக கொதிந்தவுடன் எண்ணெய் மேலே வரம் அப்போது குழம்பு இறக்க ரெடியாக உள்ளது. குழம்பை இறக்கி, விருப்பபடுவோர் பொடியாக நறுக்கிய கொத்த மல்லி இலையை தூவி விடவும். சுவையான மாங்காய் மீன் குழம்பு தயார்.

Leave a Reply

Your email address will not be published.