முட்டை அடை குழம்பு

muttai-kulambu

 

தேவையான பொருட்கள்  :

 

முட்டை                – 4

சின்ன வெங்காயம்     – 10

தக்காளி                – 1

பட்டை                         – 2

கிராம்பு                         – 4

மல்லி தூள்            – 1 ½ தேக்கரண்டி

சீரகம்                  – 1 ஸ்பூன்

புளி                    – 1 எலுமிச்சை அளவு

கருவேப்பிலை          – 1 கொத்து

தேங்காய் துருவல்      – 4 ஸ்பூன்

மஞ்சள் தூள்           – ½ தேக்கரண்டி

மிளகாய் தூள்          – 1 தேக்கரண்டி

எண்ணெய்              – தேவையான அளவு

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம்:

 

  1. ஒரு பாத்திரத்தில் நான்கு முட்டையையும் உடைத்து உற்றி அடித்துகொள்ளவும். அதில்  பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், கருவேப்பிலை, சிறிது உப்பு போட்டு கலந்து வைக்கவும்.

 

  1. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதில் பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். அதில் நறுக்கின வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். ஒரு கப் நீரில் கலந்து வைத்துள்ள புளி கரைசலை அதில் உற்றி மசாலா தூள் அனைத்தையும் சேர்க்கவும்.

 

  1. பிறகு தேங்காய், சீரகம் சேர்த்து அரைத்து வைத்துள்ள கலவையை ஒரு கொதி வந்தவுடன் சேர்க்கவும். தேவையான உப்பு சேர்த்து பாத்திரத்தை மூடி 15 வினாடி கொதிக்க விடவும். முட்டை அடை குழம்பு தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.