முட்டை கடலை குழம்பு

muttai-kulambu

 

தேவையான பொருட்கள்  :

 

முட்டை                 – 4 (வேக வைத்தது)

கொண்டைக்கடலை     – 100 கிராம் (வேக வைத்தது )

வெங்காயம்            – 1 (நறுக்கியது)

புளிக் கரைசல்          – 1 கப்

கடுகு, சோம்பு          – தாளிக்க

எண்ணெய்              – 2 தேக்கரண்டி

தக்காளி                – 1 (நறுக்கியது)

மிளகாய் தூள்          – 2 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

உப்பு                   – தேவைக்கேற்ப

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் கொண்டைக்கடலையை வேக வைத்துக்கொள்ளவும். பிறகு முட்டையையும் வேக வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு போட்டு தாளிக்கவும். பிறகு இதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய வெங்காயம், தக்காளி, தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.

 

  1. பின்பு நன்றாக வதங்கிய கலவையில் மிளகாய் தூள், புளிக்கரைசல் மற்றும் தண்ணீர் ஊற்றி அதிலே ஏற்கனவே வேக வைத்துள்ள கொண்டைக் கடலை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

 

  1. பிறகு வேக வைத்த முட்டைகளின் மேலே கத்தியால் லேசாக கீறி விடவும். பிறகு அந்த முட்டைகளை கொதிக்கும் புளிக்கரைசலில் போடவும். முட்டை குழம்புடன் நன்றாக கொதித்து வரும். கொதிநிலை குழம்பு பதத்திற்கு வந்ததும் இறக்கிவிடவும். இப்போது சூடான முட்டை கடலை குழம்பு தயார் .

Leave a Reply

Your email address will not be published.