முட்டை குழம்பு-2

muttai-kulambu

 

 

தேவையான பொருட்கள் :

 

முட்டை                – 4

முருங்கைக் காய்       – 1

உருளைகிழங்கு        – 1

தக்காளி                – 2

வெங்காயம்            – 1 கப்

துருவிய தேங்காய்     – 1/2 கப்

கருவேப்பில்லை        – 1  கொத்து

மிளகாய்த் தூள்        – 1 மேசைக்கரண்டி

சீரகப் பொடி            – 1/2 தேக்கரண்டி

சோம்பு பொடி          – 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்           – 1 தேக்கரண்டி

மல்லித் தூள்           – 3 மேசைக்கரண்டி

சோம்பு                         – 1 தேக்கரண்டி

எண்ணெய்              – தேவைக்கேற்ப

உப்பு                   – தேவைக்கேற்ப

 

செய்முறை விளக்கம் :

 

  1. துருவிய தேங்காய், மிளகாய்த்தூள், சீரகப்பொடி, சோம்பு, மஞ்சப்பொடி, மல்லித்தூள், ஒரு சிறிய வெங்காயம், சிறிதளவு தண்ணீர் இவைகள் அனைத்தயும் சேர்த்து நன்றாக மிக்ஸ்சியில் அரைக்கவும்.

 

  1. ஒரு கடாயியை அடுப்பில்வைத்து அதில் எண்ணையை ஊற்றவும், எண்ணெய் சூடானவுடன் சோம்பு, கருவேப்பிலையை போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயம், தக்காளி இவைகளை அடுப்பில் இருக்கும் தாளிப்புடன் பத்திரத்தில் சேர்த்து, இரண்டு நிமிடம் வதக்கி விடவும்.

 

  1. பிறகு உருளைகிழங்கு, முருங்கைக்காயை நறுக்கி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். பிறகு தேவையான அளவு உப்பையும் போட்டு, அரைத்த மசாலாவை இதனுடன் சேர்த்து பத்து நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

 

  1. குழம்பு கொத்தித்தவுடன் முட்டைகளை உடைத்து நேரடியாக ஒரே இடத்தில் ஊற்றமால் பரவலாக குழம்பின் மேல் சேர்க்கவும். குழம்பை சிறிது நேரம் மூடி போட்டு வேக விடவும் பிறகு இறக்கவும். சுவையான முட்டை குழம்பு தயார் .

Leave a Reply

Your email address will not be published.