முட்டைக் குழம்பு

egg yellow

 

தேவையான பொருட்கள்  :

 

முட்டை        – 5 (அவித்தது)

வெங்காயம்    – 2 (நறுக்கியது)

தக்காளி        – 150 கிராம் (நறுக்கியது)

தேங்காய்       – ¼ மூடி

கறிவேப்பிலை – 1 கொத்து

கடுகு           – 1/4 தேக்கரண்டி

எண்ணெய்      – 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள்   – ½ தேக்கரண்டி

மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி

மல்லித் தூள்   – 2 தேக்கரண்டி

உப்பு           – 1 தேக்கரண்டி

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் முட்டையை வேக வைத்து தனியாக வைக்கவும். பின்பு ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றிக் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். கடுகு வெடித்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.

 

  1. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் நறுக்கிய தக்காளி, மிளகாய்த் தூள், மல்லித் தூள், அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து , மஞ்சள் தூள் போட்டு ஐந்து நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்.

 

  1. குழம்பு நன்றாக கொதித்து சேர்ந்து வந்ததும், முட்டையின் தோலை உரித்து விட்டு குழம்பில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.

 

Leave a Reply

Your email address will not be published.