வறுத்து அரைத்த மீன் கறி

fishd

வறுத்து அரைத்த மீன் கறி

 

தேவையான பொருட்கள் :

மீன்                    – ½ கிலோ
தேங்காய்               – 1 கப் (துருவியது)

மிளகு                  – 2 தேக்கரண்டி
பெருங்காயம்           – ½ தேக்கரண்டி
மிளகாய் வற்றல்       – 6
தனியா                 – 3 தேக்கரண்டி
புளிகரைசல்            – 1 கப்
நல்லெண்ணெய்        – 3 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம்     – 10
கறிவேப்பிலை          – 5 கொத்து
பூண்டு                  – 1 முழு பூண்டு
சுக்கு                   – 1 இன்ச் துண்டு
ஓமம்                  – 2 தேக்கரண்டி

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். ஒரு கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் சூடானதும் மிளகை போட்டு வெடித்ததும்மிளகாய் வற்றல், தனியாத் தூள், மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வறுக்கவும்.

 

  1. பிறகு வெங்காயம், 10 பல் பூண்டு, கறிவேப்பிலை போட்டு தொடர்ந்து வறுக்கவும். இதனுடன் தேங்காய் துருவளையும் சேர்க்கவும்.

 

  1. குறைவான தீயில் அடுப்பை வைத்து வறுக்கும் போது, தேங்காய் பொன்னிறமாகும் இந்நிலையில் பொடித்த சுக்கு, ஓமம், பெருங்காயம் சேர்த்து வறுக்கவும். இப்போது அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரம் வறுக்கவும்.

 

  1. சூடு ஆறியதும் மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த கலவையுடன் புளிக்கரைசல், தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இதனுடன் மீன் துண்டு மற்றும் மீதமுள்ள பூண்டுகளையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். கொதித்து வாசனை வந்த பிறகு இறக்கி பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published.