ஆந்திரா கோழி கிரேவி

kothu koli

 

 

தேவையான பொருட்கள் :

 

கோழி                  – ½ கிலோ

வெங்காயம்            – 3 (நறுக்கியது)

பச்சை மிளகாய்                – 4

இஞ்சி, பூண்டு விழுது  – 2 மேசைக்கரண்டி

மிளகாய் தூள்          – 1 மேசைக்கரண்டி

பட்டை                 – 1 அங்குல துண்டு

சோம்பு                 – 1 மேசைக்கரண்டி

மிளகு                  – ½ தேக்கரண்டி

ஏலக்காய்               – 2

கிராம்பு                 – 2

பிரிஞ்சி இலை         – 1

கறிவேப்பிலை          – 2 கொத்து

மல்லித்தலை           – ½ கப்

எண்ணெய்              – 3 மேசைக்கரண்டி

தனியா தூள்           – 1½ மேசைக்கரண்டி

மஞ்சள் தூள்           – ½ தேக்கரண்டி

தயிர்                   – 2 மேசைக்கரண்டி

முந்திரி பருப்பு         – 15

கரம் மசாலா தூள்      – ½ தேக்கரண்டி

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் கோழி கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த கோழி இறைச்சியுடன் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், கரம் மசாலாத் தூள், தயிர் மற்றும் உப்பு சேர்த்து பிசறி இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

 

  1. முந்திரி பருப்பை மிக்ஸிசியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் பச்சை மிளகாயுடன் மல்லித்தலை, சோம்பு, மிளகு சேர்த்து தனியாக அரைத்து வைக்கவும். அடுப்பில் வாணலியியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய் கிராம்பு, ப்ரிஞ்சி இலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.

 

  1. தாளிப்புடன் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். மேலும் அதனுடன் ஊற வைத்த கோழி துண்டுகளை போட்டு கிளறவும். கோழி முக்கால் பாகம் வேகும் வரை மிதமான தீயில் கிளறவும்.

 

  1. பிறகு அரை கப் தண்ணீர் ஊற்றி கிளறவும், இதனுடன் அரைத்த பச்சை மிளகாய் கலவை சேர்த்து நன்றாக கலக்கவும். கோழிக் கறி மெது மெதுவென்று வெந்ததும் அரைத்து வைதிருக்கும் முந்திரி பருப்பு விழுதை சேர்த்து சிறிது நேரம் வேக விட்டு பிறகு இறக்கவும் . சுவையான ஆந்திரா கோழி கிரேவி தயார்.

Leave a Reply

Your email address will not be published.