ஆந்திரா நல்லி எலும்பு கறி

ஆந்திரா நல்லி எலும்பு கறி

 

 

தேவையான பொருட்கள் :

 

ஆட்டு நல்லி எலும்பு    – 15

பெரிய வெங்காயம்     – ½ கிலோ (நறுக்கியது)

தக்காளி                – 5 (நறுக்கியது)

தயிர்                   – ½ கப்

இஞ்சி, பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி

மஞ்சள் தூள்           – ½ தேக்கரண்டி

மிளகாய்த்தூள்         – 1 மேசைக்கரண்டி

கரம் மசாலா           – 1 தேக்கரண்டி

கொத்தமல்லி           – 1 கைப்பிடி

உப்பு                   – தேவையான அளவு

 

தாளிக்க தேவையான பொருட்கள் :

 

கிராம்பு                 – 5

ஏலக்காய்       – 4

பிரிஞ்சி இலை – 2

எண்ணெய்      – 3 மேசைக்கரண்டி

பட்டை                 – சிறிது

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் ஆட்டு எலும்பை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, மற்றும் பட்டை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு வதக்கவும்.

 

  1. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கி, ஆட்டு எலும்பை சேர்த்து வதக்கவும். எலும்பு கறி நன்றாக வதங்கியதும் உப்பு, ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி விடவும். 12 விசில் வரும் வரை காத்திருந்து நன்றாக வேக வைத்து இறக்கவும்.

 

  1. குக்கரில் ஆவி போனதும் திறக்கவும் பிறகு அடுப்பில் வைத்து நறுக்கிய தக்காளியையும், நன்கு அடித்த தயிரையும் சேர்த்து வேகா விடவும். தக்காளி நன்கு வெந்து, எண்ணெய் பிரியும் வரை வைத்து இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லி தூவி விடவும். பரிமாற சுவையான ஆந்திரா நல்லி எலும்பு கறி தயார்.

Leave a Reply

Your email address will not be published.