இறால் கிரேவி

இறால் தொ‌க்கு

 

தேவையான பொருட்கள் :

 

இறால்                         – ½ கிலோ (சுத்தம் செய்த்தது)

மிளகுத்தூள்            – 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள்         – 2 தேக்கரண்டி

மல்லி தூள்            – 1 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது – 2 ஸ்பூன்

சீரகத்தூள்              – 1 தேக்கரண்டி

எலுமிச்சம் பழம்        – 1 மூடி

எண்ணெய்              – 4 தேக்கரண்டி

கறிவேப்பிலை, மல்லி  – சிறிதளவு

சின்ன வெங்காயம்     – 100 கிராம்(நறுக்கியது)

தக்காளி                – 2 (நறுக்கியது)

பெரிய வெங்காயம்     – 1 கப்(நறுக்கியது)

பச்சை மிளகாய்        – 2

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் இறாலை தோலை உ‌ரி‌த்து நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். ஒரு கடாயில்  நறுக்கிய சின்ன வெங்காயத்துடன், தக்காளி, மல்லித்தலை, கறிவேப்பிலை ஒவ்வொன்றாக போட்டு மிதமாக வதக்கி சூடு போனதும் பிறகு மிக்ஸ்சியில் போட்டு நன்றாக அரைக்கவும்.

 

  1. பின்னர் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக நன்கு வதங்கிய பின்பு, அதில் இஞ்சி பூண்டு போட்டு மீண்டுன் நன்கு வதக்கவும்.

 

  1. பச்சை வாடை போகும் வரை வதக்கவும் பிறகு இதனுடன், அரைத்து வைத்த மசாலாக் கலவையைப் சேர்க்கவும். மிளகாய்த் தூள், மல்லித் தூள் சேர்த்து கிளறவும். நன்றாக வதங்கிய பிறகு அதில் எலுமிச்சம் பழச்சாறு ஊற்றி உப்பையும் சேர்த்து வதக்கவும்.

 

பிறகு கழுவி வைத்துள்ள  இறாலை இதனுடன் சேர்க்கவும். அதன் மீது மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். சிறிது நேரம் குறைவான தீயில் வைத்து மூடி வேகவிடவும். சுவையான இறால் கிரேவி தயார்

Leave a Reply

Your email address will not be published.