இறால் தொ‌க்கு

இறால் தொ‌க்கு

 

தேவையான பொருட்கள் :

 

இறால்                         – ¼ கிலோ

தக்காளி                – 5 (நறுக்கியது)

வெங்காயம்            – 5 (நறுக்கியது)

பச்சை மிளகாய்        – 4 (நறுக்கியது)

எண்ணெய்              – 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்           – ½ தேக்கரண்டி

கடுகு கறிவேப்பிலை   – தாளிக்க

உப்பு                   – தேவையான அளவு

மிளகாய்த் தூள்        – 5 தேக்கரண்டி

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் இறாலை தோலை உ‌ரி‌த்து நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு ஒரு பாத்திரத்தில் நன்கு சுத்தம் செய்த இறாலுடன் மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வேக வைக்கவும். ஒரு கடையில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.

 

  1. தாளித்தவுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வத‌க்கவும். ‌பிறகு மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பை போட்டு பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்.

 

  1. கலவை நன்றாக வதங்கியதும் இதனுடன் வேக வைத்த இறாலைச் சேர்த்து நன்றாக கிளறி இறக்கியவுடன் நறு‌க்‌கிய க‌றிவே‌ப்‌பிலை, கொ‌த்தும‌ல்‌லி தலைகளை போட்டு மூடவும். சுவையான இறால் தொக்கு பரிமாற தயார்.

Leave a Reply

Your email address will not be published.