இறால் மசாலா

iral

 

தேவையான பொருட்கள் :

 

இறால்                         – 800 கிராம்

கடலை எண்ணெய்     – 100 மி.லி.

ஆனியன் புரீ           – 80 மி.லி.

வெந்தயம்              – 15 கிராம்

பூண்டு                  – 20 கிராம்

இஞ்சி                  – 20 கிராம்

மஞ்சள் பொடி          – ½ தேக்கரண்டி

மிளகாய்ப்பொடி        – 1 தேக்கரண்டி

கிராம்பு                         – 10

மால்ட் வினிகர்                 – 4 மேசைக்கரண்டி

இலவங்கப்பட்டை       – 1 அங்குல நீளம்

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் இறாலை தோலை உ‌ரி‌த்து நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். சீரகம், மிளகாய்ப்பொடி, இலவங்கப்பட்டை, மஞ்சள்பொடி, கிராம்பு, பூண்டு, இஞ்சி மற்றும் மால்ட் வினிகரை 100 மி.லி, தண்ணீருடன் கலந்து கெட்டியாக கரைக்கவும்.

 

  1. பிறகு எண்ணெயை மைக்ரோ வேவில் ஒரு நிமிடம் சூடக்கவும் . இதனுடன் ஆனியன் புரீ சேர்த்து ஆறு நிமிடம் வரை மைக்ரோ வேவில் வைத்து கொதிக்கசெய்யவும். மசாலா கலவையை பிரட்டி மீண்டும் மைக்ரோவேவின் பவர் 5ல் நான்கு நிமிடங்கள் வரை வேக வைக்கவும்.

 

  1. மறுபடியும் இறால் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். தொடர்ந்து இரண்டு நிமிடங்களுக்கு மைக்ரோவேவில் வேக வைக்கவும்.

Leave a Reply

Your email address will not be published.