ஆய்ஸ்டெர் சாஸ் சிக்கன்

oyster

 

தேவையான பொருட்கள் :

 

கோழி                  – ½ கிலோ (சிறிய துண்டாக வெட்டியது)

இஞ்சி பூண்டு விழுது   – 2 மேசைக்கரண்டி

சோளமாவு             – 2 மேசைக்கரண்டி

சோயாசாஸ்            – 2 தேக்கரண்டி

மிளகு தூள்            – 1 தேக்கரண்டி

ஆய்ஸ்டெர் சாஸ்       – 1 மேசைக்கரண்டி

எண்ணெய்              – தேவையான அளவு

உப்பு                   – தேவையான அளவு

 

கிரேவி செய்ய தேவையான பொருட்கள் : 

 

குடை மிளகாய்         – 1

பச்சை மிளகாய்                – 4 (இரண்டாக கீறியது)

பூண்டு                  – 4 பல்

சின்ன வெங்காயம்     – 4

ஆய்ஸ்டெர் சாஸ்      – 2 தேக்கரண்டி

சோளமாவு             – 1 தேக்கரண்டி

வெங்காய தாள்         – 3 (1 அங்குல நீளமாக நறுக்கியது)

 

செய்முறை விளக்கம்:

 

  1. முதலில் கோழியை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். ஒரு பாத்திரத்தில் கோழிகறியுடன் இஞ்சி பூண்டு விழுது, சோள மாவு, சோயாசாஸ், ஆய்ஸ்டெர் சாஸ், மிளகு தூள் எல்லாவற்றையும் சேர்த்து பிரட்டி இருபது நிமிடம் ஊறவைக்கவும்.

 

  1. தனியாக கோழித்துண்டுகளை மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து வைக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கி, பச்சை மிளகாய் மற்றும் சதுரங்களாக வெட்டிய குடை மிளகாயயும் வதக்கவும்.

 

  1. பிறகு ஆய்ஸ்டெர் சாஸ் சேர்க்கவும். இதனுடன் பொரித்த கோழி துண்டுகளை சேர்த்து கிளறி வெங்காய தாள் சேர்த்து பிரட்டவும். சோள மாவில் கால் கப் தண்ணீர் கலந்து இதனோடு சேர்த்து கிளறவும். சிறிது நேரம் கொதித்தவுடன் இறக்கி பரிமாறவும்.

 

Leave a Reply

Your email address will not be published.