கருவாட்டு கறி – நெய்மீன் கருவாடு

karuvadu

 

தேவையான பொருட்கள் :

 

நெய்மீன் கருவாடு      – 100 கிராம் (தனியாக பொறித்தது)

பச்சைமிளகாய்                 – 10 எண்ணிக்கை (நறுக்கியது)

சின்ன வெங்காயம்     – ½ கிலோ (நறுக்கியது)

எண்ணைய்             – 4 ஸ்பூன்

சாம்பார் பொடி         – 2 ஸ்பூன்

 

செய்முறை விளக்கம்

 

  1. முதலில் நெய்மீன் கருவாடை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். நெய்மீன் கருவாட்டை தனியாக பொறித்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி நறுக்கிய வெங்காயம், சபச்சைமிளகாயையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.

 

  1. இவை வதங்கியவுடன், இரண்டு ஸ்பூன் சாம்பார் பொடியை சேர்த்து முக்கால் கப் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.

 

  1. பின்பு நெய்மீன் கருவாட்டை போடவும். அடுப்பின் தீயை குறைத்து மிதமான சூட்டில் வேகவைத்து எண்ணைய் மேலே மிதக்கும் வரை அடுப்பில் வைத்து பிறகு இறக்கவும். சுவையான நெய்மீன் கருவாட்டு கறி தயார்.

Leave a Reply

Your email address will not be published.