கோழி இறக்கை கறி மசாலா

கொட்ரா கோழி குருமா

 

 

தேவையான பொருட்கள் :

 

கோழி இறக்கை கறி   – 5

முட்டை                – 2

இஞ்சி                  – 1 துண்டு

பூண்டு                  – 10 பல்

சோளமாவு             – சிறிதளவு

எண்ணெய்              – பொரிக்க

மிளகாய்தூள்           – 1 மேசைக்கரண்டி

மிளகுதூள்             – ½ மேசைக்கரண்டி

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம்:

 

  1. முதலில் கோழி இறக்கையை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு கோழி முட்டையை ஒரு குழியான பாத்திரத்தில் ஊற்றி நன்றாக அடித்து கொள்ளவும். மிக்ஸ்சியில் இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும். சுத்தம் செய்த கோழி இறக்கையை சோளமாவில் நன்றாக பிரட்டவும்.

 

  1. பின்பு அடித்து வைத்துள்ள முட்டையில் கோழி இறக்கையை நனைக்கவும் மற்றும். இதில் தேவையான அளவு உப்பை சேர்க்கவும். சூடான எண்ணெயில் கோழி இறக்கையை பொறிக்கவும்.

 

  1. பிறகு சிறிதளவு எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி, மிளகு தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி, கலவை கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.

 

  1. மசாலா கலவை நன்றாக கெட்டியானதும், இதனுடன் பொறித்த கோழி இறக்கையை சேர்த்து சுண்டும் வரை வேக விடவும். சுவையான கோழி இறக்கை கறி மசாலா தயார்.

Leave a Reply

Your email address will not be published.