சிக்கன் கிரேவி

cashew

 

தேவையான பொருட்கள்:

 

எலும்புடன் உள்ள சிக்கன்      – ½ கிலோ

சின்ன வெங்காயம்             – 100 கிராம் (நீளமாக நறுக்கவும்)

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்    – 100 கிராம்

இஞ்சி, பூண்டு விழுது          – 10 கிராம்

முந்திரிபருப்பு                  – 10 கிராம்

சீரகம்                          – ¼  ஸ்பூன்

சோம்பு                                 – ¼ ஸ்பூன்

மிளகு                          – ¼ ஸ்பூன்

பட்டை                                 – 1

கிராம்பு                                 – 3

தேங்காய் சில்                  – 1

மிளகாய் வற்றல்               – 3

மிளகாய் பொடி                         – 10 கிராம்

மஞ்சள் பொடி                  – சிறிதளவு

தேங்காய் எண்ணெய்           – சிறிதளவு

உப்பு                           – தேவையான அளவு

 

 

செய்முறை விளக்கம்: 

 

  1. முதலில் கோழிக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு ஒரு கடாயில் சீரகம், சோம்பு, மிளகு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து பின்பு இதனுடன் பட்டை, கிராம்பு சேர்த்து பொடியாக அரைக்க வேண்டும். முந்திரி பருப்பை தனியாக அரைக்கவும்.

 

  1. சுத்தம் செய்துள்ள கோழிக்கறியுடன் சிறிதளவு உப்பு, மஞ்சள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பாதிவேக்காடு வெந்தவுடன் எடுத்துவைக்கவும். பிறகு தாளிக்க ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து சின்னவெங்காயத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்.

 

  1. வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அதில் இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் பொடி, மசாலாப் பொடி வகைகள் அனைத்தையும் சேர்த்து வதக்க வேண்டும். மசாலாக் கலவை கொஞ்சம் கெட்டியாக வரும் போது,சுவைக்கு தேவையான அளவு உப்பு, இறைச்சியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

 

  1. இறைச்சி நன்றாக வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கும் முன், முந்திரி விழுதை சேர்க்கவும். தேங்காய் துண்டுகளை தேங்காய் எண்ணெயில் வதக்கி மேலே தூவி விடவும், பிறகு பொடியாக நறுக்கிய மல்லிதலையால் அலங்கரிக்க வேண்டும். சுவையான சிக்கன் கிரேவி தயார்.

Leave a Reply

Your email address will not be published.