சிக்கன் குடமிளகாய் மசாலா

கொட்ரா கோழி குருமா

 

தேவையான பொருட்கள் :

 

கோழிக்கறி             – ½ கிலோ

பெரிய வெங்காயம்     – 4 (பொடியாக நறுக்கியது)

குடமிளகாய்            – 4 (நறுக்கியது)

மிளகாய்த்தூள்         – 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள்           – ¼ தேக்கரண்டி

சோயா சாஸ்           – ½ தேக்கரண்டி

எலுமிச்சம் பழச்சாறு   – 2 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

கார்ன்ஃபிளார் மாவு    – 2 மேசைக்கரண்டி

எண்ணெய்              – 2 மேசைக்கரண்டி .

உப்பு                   – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் கோழிக்கறியை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு ஒரு பாத்திரத்தில் கழுவிய கோழிக்கறியை, இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சோயா சாஸ், எலுமிச்சம் பழச்சாறு மற்றும் உப்பு கலந்து நன்றாக பிரட்டி அடுப்பில் வைக்கவும்.

 

  1. கோழிக்கறி நன்றாக வெந்ததும் இறக்கி வைக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம், இதனுடன் குடமிளகாயையும் போட்டு நன்றாக வதக்கவும்.

 

  1. வெங்காயம், குடமிளகாய் நன்கு வதங்கியதும் வேக வைத்திருக்கும் கோழிக்கறியை சேர்த்து கிளறவும். பின்பு கார்ன்ஃபிளார் மாவைத் தூவி நன்றாக கிளறி இறக்கவும். இப்போது பரிமாற சுவையான சிக்கன் குடமிளகாய் மசாலா தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.