சிக்கன் மசாலா

cashew

 

 

தேவையான பொருட்கள்   :

 

சிக்கன்                  – ½ கிலோ (துண்டாக வெட்டியது)

வெங்காயம்        – ½ கிலோ (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் பொடி           – ½ தேக்கரண்டி

தனியாப் பொடி    – 1 தேக்கரண்டி

மிளகாய்த் தூள்          – 2 தேக்கரண்டி

எண்ணெய்         – ½ கப்

சோம்பு            – 2 தேக்கரண்டி

பிரிஞ்சி இலை           – 2

தக்காளி           – 6

இஞ்சி விழுது            – சிறிதளவு

பூண்டு விழுது           – சிறிதளவு

பச்சை மிளகா‌ய் ‌விழுது   – சிறிதளவு

புளிக் கரைசல்           – 1 கப்

துருவிய தேங்காய் – ½ மூடி

பட்டை                  – 2

சோம்பு            – 2 தேக்கரண்டி

உப்பு              – தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சோம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 

  1. அதில் மசாலாப் பொடிகள் மற்றும் தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது ஆகியவைகளை சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளியை போட்டு தளதளவென்று கொதிவந்தவுடன் துண்டுகளாக வெட்டிய சிக்கனை சேர்த்து வதக்கவும்.

 

  1. சிக்கன் நன்றாக வதங்கியவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து, குறைந்த தீயில் மூடி வைக்கவும். முக்கால் பாகம் வெந்தவுடன் புளிக் கரைசலை சேர்த்து கலக்கவும். கொதி நிலை வந்ததும் தேங்காய், பட்டை,சோம்பு, அரைத்த  ‌விழுதையும் கைவிடாமல் கலக்கவும். ‌சி‌றிது நேர‌ம் நன்றாக வேகவிடவும். சுவையான சிக்கன் மசாலா தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.