சிக்கன் மிளகு மசாலா

கொட்ரா கோழி குருமா

 

 

தேவையான பொருட்கள்   :

 

கோழிக்கறி        – ½ கிலோ

பெரிய வெங்காயம்       – 2 (பொடியாக நறுக்கியது)

நெய்              – 1 டேபிள் ஸ்பூன்

எண்ணெய்         – 2 டேபிள் ஸ்பூன்

தக்காளி           – 2 (நறுக்கியது)

எலுமிச்சம் பழம்   – 1 மூடி

எண்ணெய்         – 4 தேக்கரண்டி

உப்பு              – தேவையான அளவு

 

அரைக்க தேவையான பொருட்கள்   :

 

பச்சை மிளகாய்    – 6

இஞ்சி             – 1 இன்ச் துண்டு

தனியா            – 2 டேபிள் ஸ்பூன்

மிளகு             – 2 தேக்கரண்டி

பூண்டு            – 8 பல்

தேங்காய்    – ½ மூடி

ஏலக்காய்    – 2

பட்டை            – சிறிது

கிராம்பு      – 3

புதினா            – 1 கைப்பிடி

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். மிக்சியில் அரைக்க தேவையான பொருட்க்களை மைபோல அரைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

 

  1. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியவுடன், நறுக்கிய தக்காளி, அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.  பச்சை வாசனை போனதும் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும், பிறகு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும். சிக்கனை  நன்றாக வேக வைக்கவும்.

 

  1. சிக்கன் வெந்ததும் சிறிதளவு நெய் சேர்த்து, எலுமிச்சம் பழ சாற்றை ஊற்றி, நன்றாக கலக்கி இறக்கவும் . இப்போது சுவையான சிக்கன் மிளகு மசாலா பரிமாற தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.