நண்டு கிரேவி

crab

 

 தேவையான பொருட்கள்   :  

 

நண்டு                   – 1 கிலோ

தக்காளி           – 200 கிராம்

இஞ்சி                   –  சிறிய துண்டு

வெங்காயம்        – 200 கிராம்

தேங்காய் துருவல் – 4 டேபிள்ஸ்பூன்

மிளகாய்த்தூள்           – 1½  தேக்கரண்டி

கரம் மசாலா             –  ½ தேக்கரண்டி

மிளகுத்தூள்       –  ½ தேக்கரண்டி

மஞ்சள்தூள்        –  ½ தேக்கரண்டி

சீரகம்                   – 1 தேக்கரண்டி

மல்லித்தூள்       – 3 தேக்கரண்டி

பெருஞ்சீரகம்            – 1 தேக்கரண்டி

பூண்டு பல்        – 6

முந்திரி பருப்பு           – 8

பச்சை மிள்காய்          – 2

எண்ணெய்         – 100 மில்லி

மல்லி, கருவேப்பிலை    –  சிறிதளவு

உப்பு              –  தேவையான அளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் நண்டை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். ஒரு அகல பாத்திரத்தில் சுத்தம் செய்த நண்டை போட்டு இரண்டு டம்ளர் நீர் சேர்த்து , உப்பு சிறிதளவு, அரைஸ்பூன் மஞ்சள் தூளயும் சேர்த்து பத்து நிமிடம் வேகவிடவும்.

 

  1. பிறகு தேங்காய், முந்திரி, பச்சை மிளகாய், மல்லி இலை, சீரகம் மற்றும் சோம்பு ஆகியவற்றை மிக்ஸியில்அரைக்கவும். இஞ்சி, பூண்டை நன்றாக  அம்மியில் தட்டி வைக்கவும். ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி காயவிட்டு அதில் கருவேப்பிலை  போட்டு தாளிக்கவும். பிறகு  நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

 

  1. வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு கரம் மசாலாவையும் சேர்த்து வதக்கவும். அடுத்தபடியாக நறுக்கிய தக்காளியை இதனுடன் சேர்க்கவும், தக்காளி நன்றாக வெந்ததும், மிள்காய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து பிரட்டி சிறிது நீர் தெளித்து மூடி விடவும்.

 

  1. மசாலாவின் பச்சை வாடை போனதும் வேகவைத்த நண்டை சேர்க்கவும். நன்றாக மசாலாவுடன் நண்டை பிரட்டவும். அரைத்தவைத்துள்ள  தேங்காய் விழுதை  சேர்த்து ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும். கெட்டியாக இருந்தால் மீண்டும் பாதி கப் நீர் ஊற்றி  நன்றாக  பிரட்டவும்.

 

  1. தண்ணீர் நன்றாக கொதித்து வற்றியவுடன், தேங்காய் வாடை போனதும் மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி இறக்கவும். சுவையான நண்டு கிரேவி பரிமாற தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.