நண்டு மசாலா

crab

 

 தேவையான பொருட்கள்  : 

 

நண்டு                   – 10

காய்ந்த மிளகாய்   – 2

பச்சைமிளகாய்           – 2

தக்காளி           – 2 கப் (நறுக்கியது)

மஞ்சள்தூள்        – ½ தேக்கரண்டி

தேங்காய்த்துருவல் – ஒரு கப்

வெங்காயம்        – ஒரு கப் (நறுக்கியது)

இஞ்சி, பூண்டு விழுது     – 5 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள்           – ½ தேக்கரண்டி

கடுகு             – தேவையான அளவு

எண்ணெய்         – தேவையான அளவு

உப்பு              – தேவையான அளவு

கறிவேப்பிலை           – சிறிதளவு

கொத்தமல்லித்தழை      – சிறிதளவு

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் நண்டை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு தேங்காயை துருவி இதனுடன்  பச்சை மிளகாய் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைக்கவும். ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகை போட்டு  தாளிக்கவும்.

 

  1. கடுகு பொறிந்த்தவுடன் காய்ந்த மிளகாயியைப்போட்டு சிறிது வதக்கி அத்துடன் இஞ்சி, பூண்டு விழுதயும் சேர்த்து நன்கு வதக்கவும்.இஞ்சி, பூண்டு விழுது நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

 

  1. பின்பு தக்காளியைச்சேர்த்து, அடிப் பிடிக்காமல் இருக்க சிறிது நீர் சேர்த்து, வேகமான தீயில் நன்றாக வதக்கவும். எண்ணெய் வற்றும் வரை வதக்கவும். பிறகு மிதமான தீயில் வைக்கவும் இப்போது தேங்காய் விழுதினைச் ஊற்றி கலக்கவும்.

 

  1. பின் நண்டையும், கறிவேப்பிலையும் சேர்த்து நன்றாக பிரட்டி விடவும், ஒன்றரை கப் நீர் விட்டு கொதிக்க விடவும். மிதமான தீயில் நண்டை வேக விடவும் அவ்வபோது கிளறிவிட்டு சுமார் 20 நிமிடங்களுக்கு வேகவேண்டும்.

 

  1. நண்டு வெந்ததும் இறக்கி பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தலையை தூவி பரிமாறவும். சுவையான நண்டு மசாலா தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.