மசாலா சிக்கின் நுகற்ஸ்

chicken_nuggets

 

 

தேவையான பொருட்கள்   :

 

போன்லெஸ் சிக்கன்      – 1 கிலோ (வெட்டியது)

முட்டை           – 5

தயிர்              – 2 டேபிள் ஸ்பூன்

வினிகர்           – 2 தேக்கரண்டி

மிளகாய்த்தூள்           – 1 தேக்கரண்டி

மெட்ராஸ் கறித்தூள்      – ½  தேக்கரண்டி

அஜினோமோட்டோ       – ¼ தேக்கரண்டி

கறிவேப்பிலை           – சிறிதளவு

இஞ்சி                   – சிரிய துண்டு

பூண்டு                  – 1 பல்

ரஸ்க்தூள்         – தேவையான அளவு

தண்ணீர்           – தேவையான அளவு

எண்ணெய்         – தேவையான அளவு

உப்பு              – தேவையான அளவு

 

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் சிக்கனை உப்பு சேர்த்து நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கருவுடன் உப்பை கலந்து எக்பீட்டரினால் நன்றாக நுரைக்கும்படி அடிக்கவும்.

 

  1. முட்டையின் மஞ்சள்கரு, மிளகாய்த்தூள், மெட்ராஸ்கறித்தூள், கறிவேப்பிலை, இஞ்சி, தயிர், வினிகர் அகியவற்றை போட்டு கரகரப்பாக மிக்ஸியில் அரைக்கவும். அரைத்த விழுதை சிறிது நேரம் ஊறவைக்கவும். ஒரு தட்டில் ரஸ்க்தூள்களை போட்டு பரப்பவும். பின்பு ஊறிய கோழி இறைச்சி துண்டு ஒவ்வொன்றாக எடுத்து அதனை முட்டை வெள்ளைக்கருவில் முக்கி எடுக்கவும்.

 

  1. பிறகு முட்டையில் நனைத்த சிக்கன் துண்டுகளை ரஸ்க்தூளில் போட்டு நன்றாக பிரட்டவும். பிரட்டிய கோழி இறைச்சி துண்டுகளை தனியாக வைக்கவும். சிறிது நேரம் இப்படியே  ஊறவிடவும்.

 

  1. ஊறிய சிக்கன் துண்டுகளை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு நன்றாக காற்று போகாத அளவுக்கு கட்டவும். பின் இதனை ப்ரீசரில் வைக்கவும். மசாலா சிக்கின் நுகற்ஸ் தேவைபடும் போது, வெளியில் எடுத்து அதனை ஒரு அகல பாத்திரத்தில் வைத்து சிறிது நேரம் அரை வெப்பநிலையில் வைக்கவும்.

 

  1. அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா சிக்கின் நுகற்ஸை போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும். எண்ணெயை  வடிக்கட்டி விட்டு வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு அதனை சிறிது நேரம் மூடி வைக்கவும். சுவையான மசாலா சிக்கின் நுகற்ஸ் பரிமாற தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.