ஈஸி மட்டன் சாப்ஸ்

கொட்ரா கோழி குருமா

 

 

தேவையான பொருட்கள்   :

 

சாப்ஸ் மட்டன்           – ½ கிலோ

வெங்காயம்        – 200 கிராம்

தக்காளி           – 200 கிராம்

பச்சை மிளகாய்          – 4

மஞ்சள்தூள்        – ¼ தேக்கரண்டி

தனியாத்தூள்             – 2 தேக்கரண்டி

சோம்பு                  – ½ தேக்கரண்டி

சீரகம்                   – ½ தேக்கரண்டி

மிளகு                   – ½ தேக்கரண்டி

தேங்காய்          – ¼ மூடி

இஞ்சி, பூண்டு விழுது     – ஒரு தேக்கரண்டி

எண்ணெய்         – ஒரு குழிக்கரண்டி

பட்டை                  – தலா 2

லவங்கம்          – தலா 2

ஏலக்காய்          – தலா 2

உப்பு              – தேவையான அளவு

 

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். பிறகு மிக்ஸ்சியில் தேங்காயை சோம்புடன் சேர்த்து  அரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய்  ஊற்றி காயவிட்டு அதில் பட்டை, லவங்கம் மற்றும் ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

 

  1. தாளித்தவுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவைகளை சேர்த்து நன்றாக வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்தூள், தனியாத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மட்டனையும் சேர்க்கவும்.

 

  1. பிறகு அரைத்த தேங்காய் விழுதை ஊற்றி நன்றாக கலக்கவும், சாப்ஸில் நன்கு தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும். இதன் மேல் பொடித்த சீரகம் மற்றும் மிளகைச் சேர்த்துக் கிளறிவிடவும். இப்போது சுவையான ஈஸி மட்டன் சாப்ஸ் தயார்.

 

Leave a Reply

Your email address will not be published.