மருத்துவ குணம் நிறைந்த வெந்தயம்

vendayam

வெந்தயம் சிறந்த நறுமணம் மற்றும் சுவையூட்டும் தாவரப் பொருளாகும்.  இது அஞ்சாரப் பெட்டியில் தவறாமல் இடம் பெறக் கூழய ஒன்றாகும்.

பல்வேறு மருத்துவத் தன்மைகளை கொண்டுள்ளதால் இது மருத்துவ தாவரமாகவும் விளங்குகிறது.  வெந்தயத் தழை சிறந்த கீரையாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது.  பண்டைக் காலத்திலிருந்தே வெந்தயம் உணவு வகைகளில் நறுமண மூட்டவும், சுவையூட்டவும் உபயோகப்படுத்தப்படுகிறது.

வெந்தயம் உணவில் பல்வேறு முறைப்படி சேர்க்கப்படுகிறது.  உணவுப் பொருட்களுக்கு வாசனையை ஊட்டுவது மட்டுமின்றி சத்துக்களையும் தருகிறது.  கறி, கூட்டு, தோசை, இட்லி, சாம்பார் பொடி, ரசப் பொடி, மல்லி, மஞ்சள் இலைகளோடு சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.  பலவகை குழம்புகளிலும் சேர்க்கப்படுகிறது.  பேக்கரி, பிஸ்கட், ரொட்ழ தயாரிப்புக்கும் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது.

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச் சத்து, போன்றவைகள் உள்ளன.  மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச் சத்து, இரும்புச் சத்து, சோடியச் சத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்கள் உள்ளன.  மற்றும் தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் ” ஏ ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.

பயன்கள்,

வெந்தயத்திலுள்ள எண்ணெய் பசை தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது.  கருப்பு நிறத்தை தருகிறது.  கூந்தல் தைலங்கள் தயாரிப்பதற்கு வெந்தயம் பயன்படுகிறது.

வெந்தயத்திலிருந்து ஈதரை பயன்படுத்தி வாலை வடித்தல் முறையில் ஒருவகை எண்ணெய் எடுக்கப்படுகிறது.  இந்த எண்ணெய் சோப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தப் படுகிறது.  சமையலுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

வெந்தயத்திலிருந்து ஒரு வாசனையுள்ள எண்ணெய் எடுக்கப்படுகிறது.  இது சென்ட். வாசனைப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

வெந்தயத்திலிருந்து ஒரு வகை மஞ்சள் சாயம் தயாரிக்கப்படுகிறது.  இது துணிகளுக்கு வண்ணமேற்றும் மாத்திரைகளுக்கு கலர் கொடுக்க பயன்படுத்தப்படுகிறது.

வெந்தயத்தை ஊற வைத்து எடுக்கப்படும் பசை, நெசவு ஆலைகளிலும், அச்சுத் தொழில்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

சீயக்காய் தூளில் வெந்தயம் சேர்க்கப்படுகிறது.

வெந்தயத்தின் தன்மைகள்.

  • வெந்தயம் குளிர்ச்சியைத்தரும்.
  • சிறுநீரை பெருக்கும்.  துவர்ப்புத்தன்மைஉள்ளது.
  • வறட்சியை அகற்றும் தன்மை கொண்டது.
  • விதையிலுள்ள ஆல்கலாய்டுகள் பசியை அதிகரிக்கச் செய்யும்.
  • நரம்புகனை பலமாக்கும்.
  • கீரை குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை உடையது.

சித்த யுனானி முறைகளில் வெந்தயம்.

சித்த, ஆயுர்வேத வைத்திய முறைகளில் வெந்தயம், சீதபேதி, மூல நோய் இவைகளை குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.  முடி உதிர்தல், தோல் நோய், வாய்வுத் தொல்லையை போக்கவும் உபயோகப்படுத்தப்படுகிறது.  எண்ணெய்யாகவும், கரைப்பானாகவும், லேகியமாகவும், பொடியாகவும் பயன்படுத்தப்படுகிறது.

மருத்துவ பயன்கள்.

  • சீதபேதி குணமாக.
  • 20 கிராம் வெந்தயத்தை வறுத்து, இடித்து, தூளாக்கி பிறகு 50 கிராம் வெல்லம் சேர்த்து பிசைந்து ஒரு நாளைக்கு 4 முறை சாப்பிட்டால் சீத பேதி நின்றுவிடும்.  சிறிதளவு வெந்தயத்தை மோரில் கலந்து அருந்தினால் சீதபேதி குணமாகும்.  வெந்தயத்தை இளநீரில் ஊற வைத்து அரைத்து குடித்தால் சீதபேதி கடுப்பு தீர்ந்து போகும்.
  • வெந்தயத்தை வாழைப்பழத்திற்குள் வைத்து மூடி இரவு பனியில் வைத்து காலையில் 3 நாட்கள் சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
  • வயிற்றுவலி, பொருமல் நீங்க.
  • மோரில் வெந்தயத்தை ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வாய்வு, பொருமல் நீங்கும்.
  • வெந்தயம், கடுகு, பெருங்காயம், மஞ்சள், இந்துப்பு இவைகளை சம அளவு எடுத்து நெய்யில் வறுத்து பொடியாக்கி உணவுடன் சேர்த்து சாப்பிட வயிற்று வலி நீங்கும்..
  • இரவில் வெந்தயத்தை அரிசி கஞ்சியில், ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வலி தீரும்.
  • வெந்தயத்தை வறுத்து, நீர் விட்டு காய்ந்து தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்று கடுப்பு நீங்கும்.
  • திடீரென்று ஏற்படும் வயிற்று வலிக்கு வெந்தயத்தை வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடித்தால் வயிற்றுவலி தீரும்.
  • 5 கிராம் வெந்தயம், பூண்டு, பெருங்காயம், முருங்கை ஈர்க்கு இவைகளை எடுத்து நீா் சேர்த்து அரைத்து, நீரை வடிகட்டி, மூன்று வேளை ஒரு அவுன்ஸ் வீதம் குடிக்க வயிற்றுகடுப்பு நீங்கும்.
  • இரவில் வெந்தயத்தை தயிரில் ஊற வைத்து, காலையில் அரைத்து சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு நின்றுவிடும்.

கணைச்சூடு நீங்க.

வெந்தயத்தை நீராகாரத்தில் ஊற வைத்து இரவில் படுக்குமுன் சாப்பிடவும்.             20 கிராம் வெந்தயம், 50 கிராம் வெங்காயம் இரண்டையும் அரை லிட்டர் விளக்கெண்ணெய்யில் காய்த்து, வடிகட்ழ, பாலில் அரை கரண்டி எண்ணெய் விட்டு காலை வேளையில் 20 நாட்கள் குடிக்க கணைச் சூடு போய்விடும்.

மாதவிடாய், வயிற்றுவலி நீங்க.

  • 100 கிராம் வெந்தயத்தை வறுத்து, பொடியாக்கி, 200 கிராம் சர்க்கரை சேர்த்து சாப்பிட, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய், வயிற்று வலி, இடுப்பு வலி அகலும்.  வெந்தயத்தை கஷாயமாக்கி குடித்தாலும் வலி போய்விடும்.

உடல் பலம் ஏற்பட.

  • 200 கிராம் வெந்தயத்தை பாலில் ஊற வைக்க வேண்டும்.
  • பிறகு இளநீரில் ஊற வைக்க வேண்டும்.
  •  பின்பு உலர்த்தி பொடியாக்கி கற்கண்டை சேர்க்க வேண்டும்.
  •  இந்த பொடியை காலை உணவுக்குப் பின் ஒரு கரண்டி சாப்பிட வேண்டும்.
  • பிறகு சுடுநீர் அல்லது பால் சாப்பிட வேண்டும்.
  • இவ்வாறு 40 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்.
  • இப்படிச் செய்தால் உடலில் பலம் ஏற்படும்.  ஆரோக்கியம் பெருகும்.

முகப்பரு நீங்க.

ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து பருவில் தடவி வர பரு மறைந்து போகும்.

பேன், பொடுகு நீங்க.

  • தேங்காய் எண்ணெய்யில் வெந்தயம், கற்பூரத்தை போட்டு ஊற வைத்து குளிக்க பேன், பொடுகு மறைந்து போகும்.
  • பாலில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு போய்விடும்.
  • வெந்தயம், பாசிப்பயிறு இவற்றை இரவில் ஊற வைத்து காலையில் அரைத்து உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் அகலும். இதை தலையில் தேய்த்துக் குளிக்க முடி உதிராது.  கண் குளிர்ச்சி ஏற்படும்.  தலைச்சூடு நீங்கும்.  பேன், பொடுகு, அரிப்பு போய்விடும்.
  • வெந்தயத்தை மாவாக்கி, இனிப்பு சோ்த்து களி போல கிளறி சாப்பிட்டு வர தோல் நோய்கள் அகலும்.  இந்த களி உடல் சூட்டையும் கட்டுப்படுத்தும்.

Leave a Reply

Your email address will not be published.