மட்டன் பச்சை மசாலா

ப்ரான் இன் க்ரீன்

 

 தேவையான பொருட்கள்   :

 

ஆட்டுக்கறி        – ¼ கிலோ

பெரிய வெங்காயம்       – 1 (பொடித்தது)

மஞ்சள் தூள்             – ½ தேக்கரண்டி

மிளகாய்த்தூள்           – 1 தேக்கரண்டி

கரம் மசாலா             – ½ தேக்கரண்டி

பூண்டு                  – 5 பல் (பொடித்தது)

உப்பு              – தேவையான அளவு

எண்ணெய்         – 4 தேக்கரண்டி

 

அரைக்க தேவையான பொருட்கள்   :

 

பச்சை மிளகாய்          – 2

இஞ்சி                   – 1 துண்டு

பூண்டு                  – 4 பல்

கொத்தமல்லி            – 1 கைப்பிடி.

 

வதக்கி அரைக்க தேவையான பொருட்கள்   :

 

தேங்காய் துருவல் – ½ கப்

பெரிய வெங்காயம்       – 2

எண்ணெய்         – 1 தேக்கரண்டி

 

செய்முறை விளக்கம் :

 

  1. முதலில் மட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். மிக்ஸ்சியில் அரைக்க வேண்டிய பொருட்களை நன்றாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த மசாலாவுடன் கழுவிய மட்டனில் நன்றாக பிசறி பதினைந்து நிமிடங்கள் வரை ஊற வைக்கவும்.

 

  1. ஒரு வாணலியில் வதக்கி அரைக்க கொடுத்துள்ளவைகளை எண்ணெயில் வதக்கி மிக்ஸியில் அரைக்கவும். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு, வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும்.

 

  1. வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் ஊற வைத்த மட்டன், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

 

  1. கறி வதங்கியதும் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும். வெந்தகறியுடன், வதக்கி அரைத்த மசாலா சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கிவிடவும். சுவையான மட்டன் பச்சை மசாலா தயார்.

Leave a Reply

Your email address will not be published.